
கருப்பு பண ஒழிப்பு
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவிதர்ர். பின்னர் ஏற்பட்ட புதிய ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, மக்கள் பல ஏடிஎம் மையத்தை தேடி தேடி அலைந்தனர் .இதன் காரணமாக ஏடிஎம்மிலிருந்து எத்தனை முறை பணம் எடுத்தாலும், கட்டணம் வசூலிக்க பட மாட்டது என அறிவிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து தற்போது பணம் எடுபதற்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கிகள் :
சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்.டி.எப்.சி., ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ஒரு மாதத்தில் 4 முறை பணம் செலுத்தினாலோ அல்லது பணம் எடுத்தாலோ கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.