Share Market Live Today: பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: காரணம் என்ன?

By Pothy RajFirst Published Jan 23, 2023, 9:56 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. நிப்டி, சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. நிப்டி, சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளன.

சர்வதேச காரணிகள் சாதகமாக அமைந்திருப்பது, அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு, பிப்ரவரி 1ம்தேதி பட்ஜெட் அறிவிப்பு போன்றவை எதிர்பார்க்கும் விதத்தில் சாதகமாக இருக்கும் என்ற முதலீட்டாளர்கள் நம்பிக்கை ஆகியவற்றால் உற்சாகத்துடன் இன்று காலை முதல் வர்தத்கத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது Layoff சீசன்! 452 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது விப்ரோ நிறுவனம்

எதிர்பார்த்தவாறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் 3-வதுகாலாண்டு முடிவுகள் நல்லநிலையில் இருப்பதும்முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதது. ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, ரிலையன்ஸ், ஆகியவற்றின் காலாண்டு முடிவுகளும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் காலை முதல் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது

கரடி வலையில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: FMCG பெரும் சரிவு

மும்பை பங்கு்சந்தையில் சென்செக்ஸ், 441 புள்ளிகள் உயர்ந்து, 61,062 புள்ளிகளில் வர்த்கத்தை நடத்தி வருகிறது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 121 புள்ளிகள் அதிகரி்த்து, 18,148 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குசந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 24 நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன, 6 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன. மாருதி, என்டிபிசி, ஐடிசி, அல்ட்ராடெக், பஜாஜ்பின்சர்வ், ஏசியன்பெயின்ட்ஸ் ஆகிய பங்குகள் மதிப்பு சரிந்துள்ளது.

நிப்டியில் டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், கோடக் மகிந்திரா வங்கி ஆகிய பங்குகள் விலை உயர்ந்துள்ளன. அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், அதானி என்டர்பிரைசர்ஸ், ஐடிச பங்குகள் விலை சரிந்துள்ளன.
நிப்டி துறைகளில் ஊடகம், எப்எம்சிஜி, ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன.

சரிவில் முடிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சி: 18,000 நீடிக்கும் நிப்டி

மற்ற துறை பங்குகள் லாபத்தில் நகர்கின்றன. குறிப்பாக, பொதுத்துறை வங்கி பங்குகள் 1.52%லாபத்தில் உள்ளன, தனியார் வங்கி பங்குகள் 0.86%, உலோகம் 0.52%, ஆட்டோமொபைல் பங்குகள் 0.52 ஆகியவை லாபத்தோடு நகர்கின்றன
 

click me!