Share Market Today: பங்குச்சந்தையில் காளை நடமாட்டம்: முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு! சென்செக்ஸ், நிப்டி உயர்வு

By Pothy RajFirst Published Dec 14, 2022, 4:20 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன.

 அமெரிக்காவில் நவம்பர் மாத பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிட குறைவாக குறைந்துள்ளது, அதாவது 7.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

இதனால் அமெரிக்க பெடரல் வங்கி இன்று நடக்கும் கூட்டத்தில் 50 புள்ளிகளுக்கு மேல் வட்டியை உயர்த்தவாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது. இதனால் இன்று நடக்கும் அமெரிக்க பெடர் ரிசர்வ் வங்கி கூட்டத்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் காலையில் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தையில் பிற்பகுதியில் சற்று சுணக்கம் காணப்பட்டாலும், சரிவில் விழாமல் ஏற்றத்துடனே முடிந்தது.

ரூ.850 கோடிக்கு பங்குகளை திரும்பப் பெறகிறது பேடிஎம்: ஒரு பங்குவிலை தெரியுமா?

மாலைவர்தத்கம் முடிவில்  மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்ந்து, 62,677 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 52புள்ளிகள் அதிகரி்த்து, 18,660 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 9 நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன மற்ற 21 நிறுவனப் பங்குகளும் லாபமடைந்தன. ஐடிசி, பார்திஏர்டெல், அல்ட்ராடெக், ஏசியன்பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்யுஎல், நெஸ்ட்லேஇந்தியா ஆகிய பங்குகள் சரிந்துள்ளன.

5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்

நிப்டியில் எப்எம்சிஜி துறையைத் தவிர அனைத்து துறைகளும் லாபத்தில் முடிந்தன.  தகவல்தொழில்நுட்பம், ஊடகம், உலோகம், மருந்துத்துறை, நிதிச்சேவை, ஆட்டோமொபைல் பங்குகள் லாபத்தில் முடிந்தன


நிப்டியில் ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஓன்ஜிசி, யுபிஎல், ஜேஎஸ்டபிள்யு  டெக் மகிந்திரா, ஆகிய பங்குகள் லாபமடைந்தன, பார்தி ஏர்டெல், ஹெச்யுஎல், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன்பெயின்ட்ஸ் பங்குகள் சரிந்தன

click me!