
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்துப் பேசியதாவது:
சுலா ஒயின்யார்ட் நிறுவனம் இன்று ஐபிஓ வெளியீடு: ஒரு பங்கு விலை என்ன தெரியுமா?
வங்கிகள் தங்களின் வரவு செலவு அறிக்கையை ஒழுங்குபடுத்தவும் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கும், மூலதனத்தை மேம்படுத்துவதற்கும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் மற்றும் தங்கள் வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, தங்கள் வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாராக் கடனக்ளை தள்ளுபடி செய்கின்றன.
அந்த வகையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் ரூ.10 லட்சத்து 9ஆயிரத்து 511 கோடியை தள்ளுபடி செய்துள்ளன.
கடன்தள்ளுபடி செய்யப்பட்டாலும், கடன் வாங்கியவர்கள் கடனைத்திருப்பிச் செலுத்த பொறுப்புடையவர்கள், கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் தள்ளுபடி நடவடிக்கையால், கடன் வாங்கியவர்களுக்கு பலன் கிடைக்காது.
ரூ.850 கோடிக்கு பங்குகளை திரும்பப் பெறகிறது பேடிஎம்: ஒரு பங்குவிலை தெரியுமா?
வங்கிகள் பல்வேறு முறைகளில் தொடர்ந்து கடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும். கடன் மீட்பு தீர்ப்பாயம், வழக்குப்பதிவு செய்தல், சொத்துக்களை விற்பனை செய்தல் மூலம் கடனை மீட்கும்.
பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், ரூ.6 லட்சத்து 59ஆயிரத்து 596 கோடியை மீட்டுள்ளன, இதில் ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களாகும்
பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, வாராக்கடன் தொடர்பாக 3,312 வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.