Paytm BuyBack:ரூ.850 கோடிக்கு பங்குகளை திரும்பப் பெறகிறது பேடிஎம்: ஒரு பங்குவிலை தெரியுமா?

By Pothy RajFirst Published Dec 14, 2022, 1:18 PM IST
Highlights

பேடிஎம்(PAYTM) நிறுவனத்தின் தாய்நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்(One97 Communications, ) நிறுவனம், பங்குகளை வெளிச்சந்தையில் இருந்து ரூ.850 கோடிக்கு திரும்பப் பெற கடந்த 12ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

பேடிஎம்(PAYTM) நிறுவனத்தின் தாய்நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்(One97 Communications, ) நிறுவனம், பங்குகளை வெளிச்சந்தையில் இருந்து ரூ.850 கோடிக்கு திரும்பப் பெற கடந்த 12ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

ஒவ்வொரு பங்கையும் ரூ.810 விலைக்கு வாங்கிக்கொள்ளவும் பேடிஎம் நிறுவனம் முன்வந்துள்ளது. 

பைபேக்(buyback) என்பது ஒரு நிறுவனம் சந்தையில் இருக்கும் தனது நிறுவனத்தின் பங்குகளை பணம் கொடுத்து திரும்பப் பெற்று, பங்கு அளவைக் குறைக்கும். திரும்பப் பெறப்பட்ட பங்குகளை அதிக விலைக்கு மீண்டும் விற்று மீண்டும் முதலீடு செய்ய இயலும். இதன் மூலம் பங்குகளை விற்காத பிற முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு உயரும்.

2022ம் ஆண்டில் முதல்முறையாகப் சில்லறைப் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது

இந்த பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு பேடிஎம் நிறுவனம் ஒப்புதல்அளித்துள்ளதாக பங்குச்சந்தையில் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பேடிஎம் அறிவிப்பில் “ ரூ.850 கோடிக்கு பங்குகளை திரும்பப் பெற நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு பங்கையும் ரூ.810 கோடிக்கு வெளிச்சந்தையில் வாங்கிக்கொள்ள இருக்கிறது. இந்த நடவடிக்கை அடுத்த 6 மாதத்தில் முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

மறந்துடாதிங்க! பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை

அதிகபட்ச பங்குவிலை, அளவு மற்றும் எண்ணிக்கை என்பது, ஒரு கோடியே 49லட்சத்து 3827 பங்குகளாக இருக்கும். அதாவது, 1.62 சதவீத பங்குகளை திரும்பப் பெறுகிறது.

பங்குகளைத் திரும்பப்பெறும் போது, வரிகளும் சேர்த்து செலுத்த வேண்டியதிருக்கும் என்பதால், ரூ.850 கோடி என்ற மதிப்பீடு, ரூ.1,048 கோடியாக அதிகரிக்கும். 

பேடிஎம் தலைமை நிர்வாகஅதிகாரி ஷேகர் ஷர்மா கூறுகையில் “ எங்களின் பைபேக் திட்டத்தால், எங்களின் பங்குதாரர்கள் பயன்பெறுவார்கள், நீண்டகாலத்தில் பங்கு மதிப்பு அதிகரி்க்கும். நல்ல வருவாய், விற்பனை, சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பம் ஆகியவை வரும்காலத்தில் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்

சுலா ஒயின்யார்ட் நிறுவனம் இன்று ஐபிஓ வெளியீடு: ஒரு பங்கு விலை என்ன தெரியுமா?

2022, செப்டம்பர் காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,914 கோடியாகும். கடந்த நிதியாண்டைவிட 76.2 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், இழப்பு 571.50 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் ரூ.473 கோடியாகத்தான் இருந்தது

click me!