Share Market Today: பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி! சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்: உலோகம் உயர்வு

By Pothy RajFirst Published Nov 29, 2022, 10:00 AM IST
Highlights

மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே நேற்றைய வர்த்தகத்தில் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி புதிய உச்சமாக 18,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்தது. இன்று காலை வர்த்தகத்தில் அதைவிட அதிகமாக, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

3 நிமிடம்தானாம்! 10 தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு! நிர்மலா சீதாராமனுடன் பட்ஜெட் ஆலோசனையில் பங்கேற்கவில்லை

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் முன் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை சற்று மந்தமாக இருந்தது. ஆனால், வர்த்தகம் தொடங்கியதும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி ஏற்றத்தோடு சென்றன

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயர்ந்து, 62,741 புள்ளிகளில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து, புதிய உச்சமாக 18,635 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

பங்குச்சந்தை உயர்வுக்கு காரணமாக 3 அம்சங்கள் பார்க்கப்படுகின்றன. அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் வட்டிவீதம் பெரியஅளவு உயர்த்தப்படாது என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான அளவில் நவம்பரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

கடையை மூடும் அமேசான் ! இந்தியாவில் உணவு டெலிவரி சேவையையும் நிறுத்துகிறது

டாலர் குறியீடு சரிந்து, கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு வலுத்துவருவதும் சாதகமான அம்சமாகும். இது தவிர கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்தும் முதலீட்டாளர்களை நம்பிக்கையுடன் நகர வைத்துள்ளது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டியில் ஆட்டோமொபைல் துறைப் பங்குகள், தகவல் தொழில்நுட்பம், கட்டுமானத்துறை பங்குகள் மட்டும் சரிந்துள்ளன. அதிகபட்சமாக உலோகத்துறை பங்குகள் 1.64 சதவீதம் லாபமீட்டியுள்ளது.

 மற்றவகையில் நிதிச்சேவை, , எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கிகள், மருந்துத்துறை பங்குகள் லாபத்தில் உள்ளன. 

ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! 5 முக்கியக் காரணங்கள்: வரலாற்று உச்சத்தில் நிப்டி, சென்செக்ஸ்

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 நிறுவனப் பங்குகளில், 7 நிறுவனப் பங்குகளைத் தவிர மற்ற நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன. டைட்டன், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ், மகிந்திரா அன்ட்மகிந்திரா, சன்பார்மாக, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், இன்போசிஸ், என்டிபிசி, டெக்மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் நகர்கின்றன.


 

click me!