Share Market Today: ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! 5 முக்கியக் காரணங்கள்: வரலாற்று உச்சத்தில் நிப்டி, சென்செக்ஸ்

By Pothy RajFirst Published Nov 28, 2022, 3:47 PM IST
Highlights

தேசிய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் வாரத்தின் முதல்நாளான இன்று வரலாற்று உச்சத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. 

தேசிய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் வாரத்தின் முதல்நாளான இன்று வரலாற்று உச்சத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. 

இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் சரிவோடு தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு உயர்வுடன் முடிந்துள்ளன. தொடர்ந்து 5வது நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்ந்து, 62,475 புள்ளிகளில் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 40 புள்ளிகள் அதிகரித்து, 18,553 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தில் வர்த்தகத்தை முடித்தது. வர்த்தகத்தின் இடையே நிப்டி கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவு, 18,665புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தை, தேசிய  பங்குச்சந்தை தொடர் உயர்வுக்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளன. 

1.பெடரல் ரிசர்வ்

அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில் வட்டி வீதத்தை உயர்த்தும் என்றாலும், மிகப்பெரிய வீதத்தில் உயர்த்தாது என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.வரும் புதன்கிழமை பெடரல் ரிசர்வ் கூட்டத்தை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

2. கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று பேரலுக்கு 2 டாலர் குறைந்து 80 டாலர்வரை சரிந்துள்ளது. இது கடந்த ஜனவரிக்குப்பின் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட விலைக் குறைவாகும். சீனாவில் அதிகரிக்கும் கொரோனாவால் லாக்டவுன் கொண்டு வந்திருப்பது, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பொருளாதார மந்தநிலை வரும் என்ற தகவல் போன்றவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாகப் பார்கப்படுகிறது.

3. டாலர் குறியீடு

ஒரு கட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 83 ரூபாய் வரை சரிந்தது. ஆனால், தற்போது ரூ.82க்கு மேல் உயர்ந்துள்ளது. டாலர் குறியீடும்114 வரை சென்றது தற்போது 106க்கு குறைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் டிசம்பர் 17ம் தேதி கூடுகிறது: ஆன்லைன் கேமுக்கு 28% வரி விதிக்கப்படுமா?

4. அந்நிய முதலீட்டாளர்கள்

இந்தியாவில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது,பங்குகளை வாங்குவது அதிகரித்துள்ளது, இதற்கு துணையாக இந்திய முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் பங்குகளை வாங்குவது சாதகமாகும். நவம்பரில் இதுவரை 400 கோடி டாலருக்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியுள்ளனர்.

5. 2-ம் காலாண்டு முடிவுகள்

நடப்ப நிதியாண்டின் 2ம் காலாண்டு முடிவுகள் வரத்தொடங்கியுள்ளன. முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிட நிறுவனங்கள் லாபம் 9 சதவீதம் வரை உயர்ந்தது உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த 5 காரணங்களும், பங்குச்சந்தையில் உயர்வுக்கு முக்கியமாகும். 

உற்சாகத்தில் பங்குச்சந்தை!சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில், 15 நிறுவனங்களின் பங்குகள் லாபத்திலும் மற்றவை இழப்பிலும் சென்றன. ரிலையன்ஸ், ஏசியன்பெயின்ட், பஜாஜ்பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி,இன்டஸ்இன்ட் வங்கி, விப்ரோ, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 3.4சதவீதம் உயர்வை அடைந்தன. கடந்த ஜூன் மாதத்துக்குப்பின் அதிக விலைக்கு இன்று ரிலையன்ஸ் பங்குகள் கைமாறின.

பிஎஸ்இயில் எண்ணெய் மற்றும் எரிவாயுப் பங்குகள் 1.62% வளர்ச்சிபெற்று, அதிக லாபத்தை அடைந்தன, உலோகத்துறை பங்குகள் சரிந்தன. எப்எம்சிஜி, மருத்துவத்துறை, ஆட்டோமொபைல், வங்கித்துறை பங்குகளும் உயர்ந்தன.

தொடர் சரிவில் தங்கம்! சவரனுக்கு ரூ.110 குறைந்தது!இன்றைய நிலவரம் என்ன?

நிப்டியில் எரிசக்தித்துறை பங்குகள் 1.45 சதவீதம் வளர்ச்சி அடைந்தன, அதைத் தொடர்ந்து கட்டுமானத்துறை 0.90%, ஆட்டமொபைல் 0.62%, வங்கித்துறை, எப்எம்சிஜி துறை, மருந்துத்துறை பங்குகளும் லாபமடைந்தன

click me!