Share Market Today: பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 270 புள்ளிகள் வீழ்ச்சி: காரணம் என்ன?

By Pothy RajFirst Published Dec 6, 2022, 9:39 AM IST
Highlights

மும்பை, தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 350 புள்ளிகள் குறைந்துள்ளது.

மும்பை, தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 350 புள்ளிகள் குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரம் அக்டோபர் மாத வேலைவாய்ப்பு நிலவரம் சிறப்பு ஓரளவுக்கு மனநிறைவாக இருந்தது, பணவீக்கமும் குறைந்து வருகிறது என்பதால், பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை குறைவாக உயர்த்தும் என்ற தகவல் வெளியானது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்வதைக் குறைத்து இந்தியச் சந்தைகள் பக்கம் திரும்பினர்

பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: நிப்டி உயர்வு, சென்செக்ஸ் சரிவு! உலோகப் பங்கு ஏற்றம்

ஆனால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பணவீக்கத்தைக் குறைக்க வட்டிவீதத்தை உயர்த்துவதற்கு பெடரல் ரிசர்வ் ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் நேற்று அமெரிக்கச் சந்தையில் சரிவு காணப்பட்டது, பங்குப்பத்திரங்களில் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும் காணப்பட்டு சரிவு  இருந்தது.

இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகம் தொடங்கியதும் சந்தையில் சரிவு காணப்பட்டு, சென்செக்ஸ் 278 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 62,556 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 79 புள்ளிகள் குறைந்து, 18,621 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 3 நிறுவனங்களின் பங்குகள் அதாவது ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்ற 27 நிறுவனப் பங்குகளும் குறிப்பாக டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் பங்குகள் மதிப்பு அதிகளவில் சரிந்துள்ளன.

மந்தமாகத் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவு! உலோகப் பங்கு லாபம்

நிப்டியில் பொதுத்துறை வங்கிப் பங்குகள் மட்டும் 2.65 சதவீதம் உயர்ந்துள்ளன. மற்ற துறைகளான ஆட்டோமொபைல், ஐடி, உலோகம், மருந்துத்துறை, கட்டுமானத்துறை பங்குகள் விலை சரிந்துள்ளன


 

click me!