Share Market Today: பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: நிப்டி உயர்வு, சென்செக்ஸ் சரிவு! உலோகப் பங்கு ஏற்றம்

By Pothy RajFirst Published Dec 5, 2022, 4:08 PM IST
Highlights

வாரத்தின் முதல்வர்த்தக நாளான இன்று மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் கடும் ஊசலாட்டம் நிலவியது. சென்செக்ஸ் சரிந்தது, நிப்டி உயர்ந்தது.

வாரத்தின் முதல்வர்த்தக நாளான இன்று மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் கடும் ஊசலாட்டம் நிலவியது. சென்செக்ஸ் சரிந்தது, நிப்டி உயர்ந்தது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் வரும் புதன்கிழமை நடக்கிறது. பணவீக்கம் குறைந்துவரும் நிலையில்,  இந்த கூட்டத்தில் வட்டி எந்த அளவு உயர்த்தப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மந்தமாகத் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவு! உலோகப் பங்கு லாபம்

சந்தை வல்லுநர்கள் 35 புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்படலாம் என்று கருத்து தெரிவித்தாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதால் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் அமெரிக்க பங்குச்சந்தை சரிவுடன் முடிந்ததால், அதன் எதிரொலி ஆசியச் சந்தையிலும் காணப்பட்டது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலவரம் சிறப்பாக இருந்தபோதிலும், பெடரல் வங்கியின் உறுதியான அறிவிப்பு வராதவரை முதலீட்டாளர்கள் ஊசலாட்டத்திலேயே உள்ளனர்.

பங்குச்சந்தையில் பலத்த அடி! காரணம் என்ன? சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி

சீனாவில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கடும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த அந்நாட்டு அரசு சம்மதித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகப் பொருளாதாரம் மீண்டும் இயல்புநிலைக்கு வருவதாக முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இதனால், ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழல் நிலவியது.

இதனால் காலை வர்த்தகம் தொடங்கும்போதே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை கைமாற்றுவதிலேயே இருந்ததால் சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் நிலவியது. 

மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 34 புள்ளிகள் குறைந்து, 62,834 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 5 புள்ளிகள் உயர்ந்து, 18,701 புள்ளிகளில் நிலை பெற்றது.

7நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ் நிப்டி, வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய பங்குகளில், 14 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன, 16 பங்குகள் விலை குறைந்தன. டாடா ஸ்டீல், என்டிபிசி, பவர்கிரிட், இன்டஸ்இன்ட் வங்கி, ஏசியன் பெயின்ட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, லார்சன்அன்ட் டூப்ரோ, விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா ஆகிய பங்குகள் விலை உயர்ந்தன.

நிப்டியில் அப்பலோ ஹாஸ்பிடல், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகிந்திரா, எஸ்பிஐ இன்சூரன்ஸ் பங்குகள் விலை சரிந்தன. ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், யுபிஎல், ஓஎன்சிஜி, கோல் இந்தியா பங்குகள் விலை உயர்ந்தன

நிப்டியில் ஆட்டோமொபைல், ஐடி, மருந்துத்துறை பங்குகள்அதிகமாக விற்கப்பட்டன. பொதுத்துறை வங்கி, ரியல்எஸ்டேட், உலோகத்துறை பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டன

click me!