தங்கம் விலை கடந்தவாரக் கடைசியில் குறைந்திருந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200க்கு மேல் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்தவாரக் கடைசியில் குறைந்திருந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200க்கு மேல் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 29 ரூபாயும், சவரனுக்கு 232 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,016ஆகவும், சவரன், ரூ.40,128ஆகவும் இருந்தது.
என்னத்த குறைஞ்சு!தங்கம் விலை குறைந்தாலும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு மேல்தான்! நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து ரூ.5,045 ஆகவும், சவரனுக்கு 232 ரூபாய்அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,045க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்கப் பங்குப்பத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆதாயம் குறைந்துள்ளதையடுத்து, முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். அதனால்தான் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் கிராம் ஒன்றுக்கு 69 ரூபாய் அதிகரித்தது, சவரனுக்கு 552 ரூபாய் உயர்ந்தது. தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், தங்கம் வாங்க நினைப்போருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.40ஆயிரத்தைக் கடந்தது! நிலவரம் என்ன?
இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 90 காசு உயர்ந்து, ரூ.72.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, ரூ.72,500 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது