Diesel Petrol Price: பெட்ரோல், டீசல் விலையால் இழப்பு: நிதி அமைச்சகத்திடம் இழப்பீடு கோரும் பெட்ரோலிய அமைச்சகம்

By Pothy RajFirst Published Dec 3, 2022, 4:03 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலையை கடந்த 8 மாதங்களாக உயர்த்தாமல் இருப்பதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு இழப்பீட்டை நிதிஅமைச்சகத்திடம் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கோர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலையை கடந்த 8 மாதங்களாக உயர்த்தாமல் இருப்பதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு இழப்பீட்டை நிதிஅமைச்சகத்திடம் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கோர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 2 காலாண்டுகளில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.21,201 கோடி இழப்பு ஏற்பட்டது.

சீன இறக்குமதி எலெக்ட்ரிக் பேன், ஸ்மார்ட் மீட்டர்களுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு முடிவு

பணவீக்கம் அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரி்த்தபோதிலும் மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் உயர்த்தவில்லை. 

சந்தைநிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாததால், ஒட்டுமொத்தமாக ரூ.21 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே எல்ஜிபி மானியமாக கடந்த சில ஆண்டுகளாக வரவேண்டிய ரூ.22 ஆயிரம் கோடியை இன்னும் நிதி அமைச்சகம் வழங்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தபோதிலும், பணவீக்கம் கருதி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. தினசரி விலையை மாற்றி அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் விலையை திருத்தி அமைக்கவில்லை. 

எல்ஐசி-யின் வாட்ஸ்அப் சேவை அறிமுகம்: எப்படி பயன்படுத்தலாம்,என்ன சேவைகள் கிடைக்கும்?:முழுவிவரம்

நிதிஅமைச்சகத்திடம் இழப்பீடு கோருவதற்கு முன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இழப்பீட்டின் அளவைக் கணக்கிடும். கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 80 டாலராக சரிந்தபோதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் இன்னும் இழப்பில்தான் இருக்கின்றன

எல்பிஜி சிலிண்டர்களை மானியவிலையில் மக்களுக்கு வழங்குவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.28ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால், இதில் ரூ.22 ஆயிரம் கோடியை மட்டும்தான் அரசு வழங்கியுள்ளது”எனத் தெரிவித்தார்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 80 டாலராகக் குறைந்திருப்பதால், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஜூன் மாதம் கச்சா எண்ணெய் பேரல் 116 டாலராக இருந்தது, தற்போது பேரல் 83 டாலராகக் குறைந்துவிட்டது. ஒருவேளை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டால், கடந்த மே 22ம் தேதிக்குப்பின் முதல்முறையாக விலை குறைப்பாக அமையும். 


 

click me!