India China: சீன இறக்குமதி எலெக்ட்ரிக் பேன், ஸ்மார்ட் மீட்டர்களுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு முடிவு

By Pothy RajFirst Published Dec 3, 2022, 1:51 PM IST
Highlights

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எலெக்ட்ரிக் பேன் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு, தரக்கட்டுப்பாட்டு சோதனையை தீவிரமாகக் கொண்டு வர உள்ளது. 

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எலெக்ட்ரிக் பேன் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு, தரக்கட்டுப்பாட்டு சோதனையை தீவிரமாகக் கொண்டு வர உள்ளது. 

இந்தத் தரகக்கட்டுப்பாடு சோதனை கொண்டுவரப்பட்டால் சீனாவில் இருந்து எலெக்ட்ரிக் பேன், ஸ்மார்ட் மீட்டர்இறக்குமதி கட்டுக்குள் வரும் என்று அரசு நம்புகிறது.

எல்ஐசி-யின் வாட்ஸ்அப் சேவை அறிமுகம்: எப்படி பயன்படுத்தலாம்,என்ன சேவைகள் கிடைக்கும்?:முழுவிவரம்

நடப்பு நிதியாண்டில், சீனாவில் இருந்து காற்றாடிகள் இறக்குமதி 132 சதவீதம் அதிகரித்து, 62.20 லட்சம் டாலராக அதிகரித்துள்ளது. இதில் 59.90 லட்சம் டாலர் மதிப்புள்ள காற்றாடிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

 இதில்  மின் ஸ்மார்ட் மீட்டர் 31லட்சம் டாலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 13.20 லட்சம் கோடி டாலர்களுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ஸ்மார்ட் மீட்டர், எலெக்ட்ரிக் பேன்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது. அவற்றுக்கு தீவிரமான தரக்கட்டுப்பாட்டு சோதனையை மீண்டும் கொண்டு வர இருக்கிறோம். குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் காற்றாடிகள், மின்மீட்டர்களுக்கு தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்த இருக்கிறோம். இந்தசோதனை நமது நுகர்வோர்கள், நிறுவனங்கள் நலனுக்காகவே நடத்தப்படுகிறது. 

கடந்த 2020ம் ஆண்டு இதேபோன்று சீனாவில்இருந்து இறக்குமதியாகும் பொம்மைகளுக்கு தரக்கட்டுப்பாட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொம்மைகள் இறக்குமதி 70 சதவீதம் கடந்த 3 ஆண்டுகளாகக் குறைந்தது.

:இந்தியாவில் வேலையின்மை 3 மாதங்களில் இல்லாத அளவு 8 சதவீதமாக நவம்பரில் அதிகரிப்பு:சிஎம்ஐஇ கணிப்பு

2019ம் ஆண்டில் 3.71 கோடி டாலர்களுக்கு சீன பொம்மைகள் இறக்குமதியான நிலையில் நடப்பு நிதியாண்டில் 1.10 கோடி டாலர்களுக்கு மட்டுமே இறக்குமதியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொம்மைகள் மதிப்பு 5.90 லட்சம் டாலர்களாகக் குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்

சீனாவுடன் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்துகொண்டே செல்கிறது மத்திய அரசுக்கு கவலையளிக்கிறது. இதைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சீனாவுக்கான ஏற்றுமதி 36.2 குறைந்து, 780 கோடி டாலராக இருக்கிறது. இறக்குமதி, 23.6சதவீதம் அதிகரித்து, 5,240 கோடி டாலர்களாக அதிகரி்த்துள்ளது. இதனால் சீனாவுக்கான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 4460 கோடி டாலர்களாக விரிவடைந்துள்ளது.
 

click me!