Share Market Today: வரலாறு படைத்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 63,000புள்ளிகளைக் கடந்து சாதனை! நிப்டி மைல்கல்!

By Pothy RajFirst Published Nov 30, 2022, 3:58 PM IST
Highlights

மும்பை பங்குச்சந்தையிலும், தேசியப் பங்குச்சந்தையிலும் கடந்த ஒருவாரமாகவே கொண்டாட்டமான போக்குதான் காணப்படுகிறது. சென்செக்ஸ் முதல்முறையாக இன்று 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18,700 புள்ளிகளுக்கு மேல் முதல்முறையாக உயர்ந்தது

மும்பை பங்குச்சந்தையிலும், தேசியப் பங்குச்சந்தையிலும் கடந்த ஒருவாரமாகவே கொண்டாட்டமான போக்குதான் காணப்படுகிறது. சென்செக்ஸ் முதல்முறையாக இன்று 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18,700 புள்ளிகளுக்கு மேல் முதல்முறையாக உயர்ந்தது

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக நிப்டி அடுத்தடுத்து உயர்வுடன் நகர்ந்து மைல்கல் எட்டி வருகிறது. 

சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை பெரிய அளவுக்கு உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பி்கையை ஏற்படுத்தின.

இது தவிர டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது, டாலர் குறியீடு சரிந்துவருவது, பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு அதிகரித்து வருவது போன்றவை முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தை அளித்தன.

ஏர் இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைகின்றன: டாடா சன்ஸ் அறிவிப்பு

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. பிற்பகலுக்குப்பின் வர்த்தகம் சூடுபிடித்தபோது சென்செக்ஸ் 63ஆயிரம் புள்ளிகளை முதல்முறைாயக எட்டி வரலாறு படைத்தது. இந்த தருணத்தின்போது, முதலீட்டாளர்கள், பங்கு வர்த்தகர்கள், தரகர்கள் உற்சாகமடைந்தனர். 

வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் சரிந்து 62,648புள்ளிகள் வரை சென்றது. ஆனால், சரிவிலிருந்து விரைவாக மீண்ட மும்பை பங்குச்சந்தை ஏறுமுகத்தில் பயணித்தது.

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 417 புள்ளிகள் அதிகரித்து, 63,099 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 140 புள்ளிகள் உயர்ந்து, 18,758 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி முதல்முறையாக 18,700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏற்றத்தில் பயணிக்கும் பங்குச்சந்தை: புதிய உச்சம் நோக்கி நிப்டி! NDTV பங்கு 5% உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் ஐடிசி, ஹெச்சிஎல்டெக்,இன்டஸ்இன்ட்வங்கி  ஆகியபங்குகள் மட்டும் சரிந்தன. மற்ற பங்குகள் அனைத்தும் விலை உயர்ந்தன.

சபாஷ் !தமிழக அரசின் நிகரக் கடன் 30 சதவீதம் குறைந்தது!வருமானம் உயர்கிறது

நிப்டியில், கட்டுமானத்துறை பங்குகள் 1.45%, உலோகம் 1.81%, எப்எம்சிஜி 1.02%, ஆட்டோமொபைல் 1.72% வரை உயர்ந்தன. இது தவிர வங்கித்துறை 0.41%, நிதிச்சேவை 0.61%, ஊடகம் 0.76%, ஐடி 0.15%, மருந்துத்துறை 0.43%,தனியார் வங்கி 0.55% உயர்ந்தன. பொதுத்துறை வங்கிப்பங்கு மட்டும் சரிந்தன. 

நிப்டியில் மகிந்திரா அன்ட் மகிந்திரா, கிராஸிம், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக், ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன. இன்டஸ்இன்ட் வங்கி, எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி, சன்பார்மா நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்தன
 

click me!