December Bank holidays 2022: டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: முழுப்பட்டியல்

Published : Nov 30, 2022, 02:29 PM IST
December Bank holidays 2022: டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: முழுப்பட்டியல்

சுருக்கம்

டிசம்பர் மாதத்தில் நாடுமுழுவதும் வங்கிகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்ப 14 நாட்கள் விடுமுறை அறிவித்து ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் மாதத்தில் நாடுமுழுவதும் வங்கிகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்ப 14 நாட்கள் விடுமுறை அறிவித்து ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைக்காக விடுமுறை விடப்படுகிறது. நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பரில் 14 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

ஏர் இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைகின்றன: டாடா சன்ஸ் அறிவிப்பு

டிசம்பர் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகள், மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமைகள் தவிர்த்து, 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி கூறப்பட்டிருப்பதாவது:

டிசம்பர் 3ம் தேதி- சனிக்கிழமை

புனித பிரான்சிஸ் சேவியர் நாள் என்பதால் கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 4-ம் தேதி- ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 5ம் தேதி- திங்கள்கிழமை
குஜராத் மாநிலத்தில் 2வது கட்டத் தேர்தல் என்பதால் அங்கு வங்கிகளுக்கு விடுமுறை 

சபாஷ் !தமிழக அரசின் நிகரக் கடன் 30 சதவீதம் குறைந்தது!வருமானம் உயர்கிறது

டிசம்பர் 10-ம் தேதி 2-வது சனிக்கிழமை

டிசம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 12ம் தேதி- திங்கள்கிழமை
டோங்கன் நெங்மின்ஜா சங்மா- ஷில்லாங்கில் விடுமுறை

டிசம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 19ம் தேதி திங்கள்கிழமை

கோவா மாநிலம் சுதந்திரம் பெற்ற தினம் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை
கிறிஸ்துமஸ் பண்டிகை மேகாலயா, ஷில்லாங்கில் விடுமுறை

டிசம்பர் 25ம் தேதி ஞாயிற்றுக்கழமை 
கிறிஸ்துமஸ் பண்டிகை

டிசம்பர் 26ம் தேதி- திங்கள்கிழமை

கிறிஸ்துமஸ், லூசுங், நாம்சூங் பண்டிகைக்காக மேகாலயா, ஷில்லாங், மிசோரம்,சிக்கம், காங்டாக்கில் விடுமுறை

என்டிடிவி இயக்குநர் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் விலகல்

டிசம்பர் 29ம் தேதி, வியாழக்கிழமை
குருகோவிந்த் சிங் பிறந்தநாள் சண்டிகர், பஞ்சாபில் விடுமுறை

டிசம்பர் 30ம் தேதி வெள்ளிக்கிழமை
கியாங் நான்பாக்- ஷில்லாங், மேகாலயாவில் விடுமுறை

டிசம்பர் 31-ம் தேதி, சனிக்கிழமை
புத்தாண்டு வரவேற்பு, அய்ஸ்வால், மிசோரமில் விடுமுறை 


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்