தங்கம் விலை தொடர்ந்து கடந்த 3 நாட்களாகச் சரிந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து கடந்த 3 நாட்களாகச் சரிந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை குறைந்ததால் நகைவாங்குவோருக்கு மகிழ்ச்சியளித்தது ஆனால், இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது
தங்கம் விலை மளமளவெனச் சரிவு ! நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி! இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,916ஆகவும், சவரன், ரூ.39,328 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.4,936 ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 488ஆக அதிகரித்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,936க்கு விற்கப்படுகிறது.
தொடர் சரிவில் தங்கம்! சவரனுக்கு ரூ.110 குறைந்தது!இன்றைய நிலவரம் என்ன?
அமெரிக்க பெடரல் வங்கி நிதிக்குழுக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெடரல் வங்கித் தலைவர் வட்டிவீதம் குறித்தும், அடுத்துவரும் ஆண்டுகளுக்கான கொள்கைகள் குறித்து எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு 260ரூபாய் வரை குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.160 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.68.00 ஆகவும், கிலோ ரூ.68,000 ஆகவும் மாற்றமில்லாமல் இருக்கிறது