Share Market Today: ஏற்றத்தில் பயணிக்கும் பங்குச்சந்தை: புதிய உச்சம் நோக்கி நிப்டி! NDTV பங்கு 5% உயர்வு

By Pothy RajFirst Published Nov 30, 2022, 9:49 AM IST
Highlights

மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. புதிய உச்சத்தை நோக்கி நிப்டி புள்ளிகள் பயணிக்கின்றன.

மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. புதிய உச்சத்தை நோக்கி நிப்டி புள்ளிகள் பயணிக்கின்றன.

சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை பெரிய அளவுக்கு உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பி்கையை ஏற்படுத்துகின்றன.

இது தவிர டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது, டாலர் குறியீடு சரிந்துவருவது, பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு அதிகரித்து வருவது போன்றவை முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தை அளிக்கின்றன.

இதனால் கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்றத்தில் பயணித்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக நிப்டி புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த வெற்றிப்பாதை இன்று காலை வர்த்தகத்திலும் தொடர்ந்து வருகிறது.

வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை! நிப்டி, சென்செக்ஸ் புதிய சாதனை! உலோகப் பங்கு ஜோர்

பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் அதிகரித்து, 62,804 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 48 புள்ளிகள் உயர்ந்து, 18,666 புள்ளிகளில் சென்று வருகிறது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 நிறுவனப் பங்குகளில் 10 நிறுவனப் பங்குகள் சரிவிலும், மற்ற 20 நிறுவனப்பங்குகள் லாபத்திலும் செல்கின்றன. ஐடிசி, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல்டெக், டெக்மகிந்திரா,பவர்கிரிட், இன்போசிஸ் பங்குகள் விலை சரிந்துள்ளன. 

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? 4 நகரங்களில் டிசம்பர் 1ல் அறிமுகம்!ஆர்பிஐ அறிவிப்பு

நிப்டியில் தகவல் தொழில்நுட்பப் பங்குகள் விலை சரிந்துள்ளன. உலோகப் பங்கு 0.94%, ஆட்டோ 0.86%, எப்எம்சிஜி, நிதிச்சேவை தலா 0.47% ஏற்றத்தில் செல்கின்றன. மருந்துத்துறை, வங்கித்துறை பங்குகளும் லாபத்தோடு கைமாறுகின்றன.

என்டிடிவி இயக்குநர் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் விலகல்

அலிபாபா நிறுவனம் தன்னிடம் இருக்கும் ஜோமேட்டோ நிறுவனத்தின் 3 சதவீதப் பங்குகளை சந்தையில் விற்க இருக்கிறது, இது சந்தையில் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படக்கூடிய அம்சமாக இருக்கிறது
என்டிடிவி நிறுவனத்தின் இயக்குநர்கள் பொறுப்பில் இருந்து ராதிகா ராய், பிரணாய் விலகியதாக நேற்று செபியில் தெரிவித்தனர். இதையடுத்து, என்டிடிவியை அதானி குழுமம் முழுமையாக கைப்பற்றுகிறது. இதனால் வர்தத்கம் தொடங்கியதும் என்டிடிவி பங்குகள் விலை 5 சதவீதம் அதிகரித்தது.
 

click me!