Share Market Today: 7நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ் நிப்டி, வீழ்ச்சி

Published : Dec 02, 2022, 09:45 AM ISTUpdated : Dec 02, 2022, 09:57 AM IST
Share Market Today: 7நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ் நிப்டி, வீழ்ச்சி

சுருக்கம்

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் ஒரு வாரத்துக்குப்பின் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் ஒரு வாரத்துக்குப்பின் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

சர்வதேச காரணிகள் சாதகமாக இல்லாதது, அமெரிக்க பெடரல் வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அமெரிக்காவின் நவம்பர் மாத வேலையின்மை நிலவரம் குறித்த அறிக்கை இன்று வெளியாகிறது இதையும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இது தவிர அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்புள்ளதாக எழுச்சரிக்கையால் முதலீட்டாளர்கள் கலக்க மடைந்தனர்.

தினசரி வரலாறு படைக்கும் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சாதனை: ஐடி,உலோகம் லாபம்

நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் உற்பத்துறை செயல்பாடு குறையக்கூடும் என்ற புள்ளிவிவரங்கள் முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை குறைவாக உயர்த்தும் என்ற நிலைப்பாடும் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டுதான் என்ற ஊகமும் சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதில் ஒரு சாதகமான அம்சமாக அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்துவருவதால், அடுத்துவரும் மாதங்களில் பெடரல் வங்கி வட்டி உயர்த்துவதை குறைக்கும். 

இந்த காரணிகள் ஆசியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து அங்கும் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இந்தியப் பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியதும் இதே நிலைதான் இங்கும் நீடித்து சரிவில் தொடங்கியது.

வர்த்தகம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும், மும்பை, தேசியப் பங்குச்சந்தை வர்த்தகப் புள்ளிகள் சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 298 புள்ளிகள் சரிந்து, 62,986 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 88 புள்ளிகள் குறைந்து, 18,724 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது

பங்குச்சந்தையில் கொண்டாட்ட மனநிலை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வரலாற்று உயர்வு: ஐடிபங்கு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 5 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தில் செல்கின்றன. மற்ற 25 பங்ககுகளும் இழப்பில் உள்ளன. குறிப்பாக, இன்டஸ்இன்ட் வங்கி, ரிலையன்ஸ், டாடாஸ்டீல், டாக்டர்ரெட்டீஸ், பார்திஏர்டெல் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன.

நிப்டியில் உலோகம், ஊடகம், மற்றும் பொதுத்துறை வங்கித்துறை பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்ற மருந்துத்துறை, தகவல்தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், நிதிச்சேவை துறைப் பபங்குகள் சரிவில் உள்ளன.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்