RBI Digital Rupee: ரிசர்வ் வங்கியின் சில்லறை டிஜிட்டல் ரூபாய் இன்று அறிமுகம்: முழுவிவரம்

By Pothy RajFirst Published Dec 1, 2022, 5:37 PM IST
Highlights

டிசம்பர் 1ம் தேதி(இன்று) சில்லரை டிஜிட்டல் ரூபாய் (e₹-R) பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக மத்திய வங்கி டிஜிட்டல் கரன்ஸி(சிபிடிசி) மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டிசம்பர் 1ம் தேதி(இன்று) சில்லரை டிஜிட்டல் ரூபாய் (e₹-R) பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக மத்திய வங்கி டிஜிட்டல் கரன்ஸி(டிபிடிசி) மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மொத்தம் 8 வங்கிகள் மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 4 வங்கிகள் மூலமும், 2வது கட்டமாக 4 வங்கிகள் மூலமும் அறிமுகம் செய்யப்படுகிறது
சில்லரை டிஜிட்டல் ரூபாய் என்பது, டிஜிட்டல் டோக்கன்களாக, மாறா மதிப்பில் இருக்கும். காகித வடிவில் இருக்கும் பணத்துக்குப் பதிலாக டிஜிட்டல் வடிவில் மாறா மதிப்பில்இருக்கும்.

சில்லரை டிஜிட்டல் ரூபாயை மொபைல் போன்களில் உள்ள வாலட், டிஜிட்டல் வாலட்கள் மூலம் பயன்படுத்தலாம். ரிசர்வ் வங்கியின் இந்த பரிசோதனை முயற்சியில் பங்கேற்கும் வங்கிகள் மட்டும்தான், டிஜிட்டல் வாலட்களைவழங்க முடியும். இந்த டிஜிட்டல் ரூபாயை ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே பரிமாற்றம் செய்யலாம், ஒரு பொருளை, சேவையை வாங்கிவிட்டு, அதற்கு ஈடாகவும் வர்த்தகருக்கும் பரிமாற்றம் செய்யலாம்.

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? 4 நகரங்களில் டிசம்பர் 1ல் அறிமுகம்!ஆர்பிஐ அறிவிப்பு

ரிசர்வ் வங்கி வழங்கும் டிஜிட்டல் ரூபாய் பாதுகாப்பானது, மதிப்பு மாறாதது. டிஜிட்டல் பணத்தை வைத்திருப்பதால் அந்தப் பணத்துக்கு வட்டிஏதும் வராது. வட்டி வரவேண்டுமென்றால் சேமிப்புக்கணக்கில்தான் டெபாசிட் செய்ய வேண்டும்.

முதல் கட்டமாக மும்பை, புதுடெல்லி, பெங்களூரு, புவனேஷ்வர் ஆகிய 4 நகரங்களில் மட்டும் டிஜிட்டல் ரூபாய் அறிமுகமாகிறது. அதன்பின் அகமதாபாத், காங்டாக், குவஹாட்டி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா, ஷிம்லா ஆகிய நகரங்களில் அறிமுகமாகும். படிப்படியாக பல்வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

நவம்பர் ஜிஎஸ்டி வரி வசூல் 3.9 சதவீதம் குறைந்தது! அக்டோபரில் அதிகம்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, டிஜிட்டல் ரூபாயை 8 வங்கிகள் வழங்குகின்ற. முதல்கட்டமாக எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐவங்கி, யெஸ்வங்கி, ஐடிஎப்சி வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, கோடக் மகிந்திரா வங்கிகள் பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்கின்றன
 

click me!