November GST Collection: நவம்பர் ஜிஎஸ்டி வரி வசூல் 3.9 சதவீதம் குறைந்தது! அக்டோபரில் அதிகம்

By Pothy RajFirst Published Dec 1, 2022, 5:11 PM IST
Highlights

நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் 2022, நவம்பர் மாதத்தில் 10.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.46 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் 2022, நவம்பர் மாதத்தில் 10.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.46 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்த நிலையில் அதைவிட 11 சதவீதம் கடந்த மாதம் அதிகரித்துள்ளது. ஆனால், 2022, அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூலைவிட, 3.9 சதவீதம் நவம்பரில் குறைவாகவே வசூலாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் ரூ.1.52 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது

தினசரி வரலாறு படைக்கும் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சாதனை: ஐடி,உலோகம் லாபம்

தொடர்ந்து 9-வது மாதமாக, ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை கடந்து செல்கிறது. 
மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 45ஆயிரத்து 867 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.25 ஆயிரத்து 681 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.32 ஆயிரத்து 651 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.77 ஆயிரத்து 103 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.10 ஆயிரத்து 433 கோடி கிடைத்துள்ளது.

பெரும்பாலும் ஜிஎஸ்டி வரி வருவாய் இறக்குமதி மூலம் கிடைத்துள்ளது, உள்நாட்டு வரிவசூலைவிட இறக்குமதிவரி மூலம் 20 சதவீதம் கூடுதலாகக் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக உள்நாட்டு வரி வசூலாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி வரி ஏறக்குறைய ரூ.11.26 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 

UPI இலிருந்து தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டல் என்ன செய்வது? முழு விவரம் உள்ளே!!

பொருளாதாரம் படிப்படியாக கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதுதான் ஜிஎஸ்டி வரி உயர்வில் தெரிகிறது.ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாகத்தான் வரி உயர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!