Gold Rate Today: தங்கம் விலை தொடர் அதிகரிப்பு! நடுத்தர குடும்பத்தினருக்கு ஷாக்! வெள்ளி விர்ர்! நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Dec 1, 2022, 10:13 AM IST
Highlights

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.312 அதிகரித்துள்ளது. 

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.312 அதிகரித்துள்ளது. 

தங்கம் விலை இன்று கிராமுக்கு 19 ரூபாயும், சவரனுக்கு 152 ரூபாயும் அதிகரித்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,936ஆகவும், சவரன், ரூ.39,488 ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியிழக்கிழமை) கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து ரூ.4,955 ஆகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 640ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,955க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை மளமளவெனச் சரிவு ! நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி! இன்றைய நிலவரம் என்ன?

அமெரிக்க பெடரல் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வட்டிவீதம் இனிமேல் அதிகமாக உயர்த்தப்படாது, குறைவாகவே உயர்த்தப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து, ஆசியப் பங்குச்சந்தைகள், இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.

இந்த எதிரொலி தங்கத்தின் மீதும் இருக்கிறது. வட்டிவீதம் குறைவாக உயர்த்தப்படும் போது அந்நிய முதலீட்டாளர்கள் அமெரிக்க பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்வதைக் குறைத்து தங்கத்தின் மீது முதலீட்டை திருப்புவார்கள். இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலைமேலும் உயர வாய்ப்புள்ளது. 

ஊசலாட்டத்தில் தங்கம் ! மீண்டும் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் என்ன?

இந்த தொடர் விலை உயர்வு, தங்க வாங்க நினைப்போருக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் பெரிய அதிர்ச்சியாகஅமைந்துள்ளது.  கடந்த 3 நாட்களில் சவரனுக்கு 260ரூபாய் வரை குறைந்த நிலையில், இரு நாட்களில் சவரனுக்கு 312 ரூபாய் தங்கம் விலை அதிகரித்துள்ளது. 

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? 4 நகரங்களில் டிசம்பர் 1ல் அறிமுகம்!ஆர்பிஐ அறிவிப்பு

வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.1.80 அதிகரித்து, ரூ.69.80 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.1,800 அதிகரித்து, ரூ.69,800 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.

click me!