LPG Gas Price: சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பா? மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?

Published : Dec 01, 2022, 09:28 AM IST
LPG Gas Price: சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பா? மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?

சுருக்கம்

டிசம்பர் மாதத்தின் முதல்நாளில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதா அல்லது உயர்த்தப்பட்டுள்ளதா என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

டிசம்பர் மாதத்தின் முதல்நாளில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதா அல்லது உயர்த்தப்பட்டுள்ளதா என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்ததால், விலை கடுமையாகச் சரிந்து பேரல் 80 டாலராகச் சரிந்தது. 

சர்வதேச சந்தையின் ஒரு மாத நிலவரத்தின் அடிப்படை சராசரியை  வைத்துதான் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை நிர்ணயம் செய்கின்றன. ஆதலால், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம், வர்த்தக ரீதியான சமையல் சிலிண்டர் விலை, ரூ.115 குறைக்கப்பட்டது, ஆனால், கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 கிலோ எடையுள்ள எல்பிஜி விலை மாற்றப்படாமல்  உள்ளது. ஆதலால், டிசம்பர் மாதத்தில் சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

December Bank holidays 2022: டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: முழுப்பட்டியல்

ஆனால், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம்  நிறுவனங்களின் இணையதளத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலையும் மாற்றப்படவில்லை. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர், 19 கிலோ வர்த்தக சிலிண்டர்கள் விலையும் மாற்றப்படவில்லை. 

UPI இலிருந்து தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டல் என்ன செய்வது? முழு விவரம் உள்ளே!!

கடந்த நவம்பர் மாதத்தில் நிலவும் அதே விலைதான் இந்த மாதமும் நீடிக்கிறது. கடந்த 6 மாதங்களாக வர்த்தகரீதியான சிலிண்டர் விலை தொடர்ந்து குறைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் ஏதும் குறைக்கப்படவில்லை.

14கிலோ சிலிண்டர் விலை, டெல்லியில் கடந்த மாதம் இருந்த ரூ1,053 விலையில் நீடிக்கிறது. கொல்கத்தாவில் ரூ.1,079, மும்பையில் ரூ.1052, சென்னையில் ரூ.1068 விலையில் நீடிக்கிறது. 
9 கிலோ எடையுள்ள வர்த்கரீதியான சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1744, மும்பையில் ரூ.1696, சென்னையில் ரூ.1891, கொல்கத்தாவில் 1845 விலையில் நீடிக்கிறது

வரலாறு படைத்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 63,000புள்ளிகளைக் கடந்து சாதனை! நிப்டி மைல்கல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கடந்த ஜனவரி மாத விலைக்கு இணையாக வந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையும், சமையல் சிலிண்டர்விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையையும், சமையல் சிலிண்டர் விலையயும் குறைக்காமல் இருந்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும்வரை விலை குறையாது எனத் தெரிகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்