
மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் கடந்த சில நாட்களாக தினசரி புதியவரலாறு படைத்து வருகின்றன. அந்த வரலாற்று உச்சம் இன்றும் தொடர்ந்தது.
குறிப்பாக அமெரிக்க பெடரல் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் மாதத்தில் வட்டிவீதம் உயர்வு குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்தார். இது முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. பெடர்ல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் ஆசியப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் முடிந்தது. இதன் எதிரொலி காலை முதலே இந்தியச் சந்தையிலும் இருந்து வருகிறது.
பங்குச்சந்தையில் கொண்டாட்ட மனநிலை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வரலாற்று உயர்வு: ஐடிபங்கு
ஏற்கெனவே நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் வரலாற்றுஉச்சமாக 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18,700 புள்ளிகளைக் கடந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை பங்குச்சந்தையில் சென்கெக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தன.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்து, 63,284 புள்ளிகளில் வர்த்தகத்தைமுடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 54 புள்ளிகள் உயர்ந்து, 18,812 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி இதுவரை இல்லாத அளவு 18,812 புள்ளிகளில் நிலைபெற்று சாதனை படைத்துள்ளது.
PTR Palanivel Rajan: சபாஷ் !தமிழக அரசின் நிகரக் கடன் 30 சதவீதம் குறைந்தது!வருமானம் உயர்கிறது
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 15 நிறுவனப் பங்குகளைத் தவிர மற்ற 15 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் முடிந்தன. அல்ட்ராடெக், டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக்மகிந்திரா,விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தன
நிப்டியில் டாடா ஸ்டீல், ஹின்டால்கோ, அல்ட்ராடெக் சிமென்ட், டிசிஎஸ், கிராஸிம் நிறுவனம் லாபமடைந்தன, ஐசிஐசிஐ வங்கி, எய்ச்சர் மோட்டார்ஸ, யுபிஎல், சிப்லா, பஜாஜ் ஆட்டோ பங்குவிலை குறைந்தது
நிப்டியில் பொதுத்துறை வங்கி, தகவல்தொழில்நுட்பம், உலோகத்துறை பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை விலை உயர்ந்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.