
இந்தியாவில் வேலையின்மை கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு 8 சதவீதமாக நவம்பரில் அதிகரித்துள்ளது எந்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதாமாகக் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருந்தது. ஆனால், நவம்பரில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் சில்லறை டிஜிட்டல் ரூபாய் இன்று அறிமுகம்: முழுவிவரம்
நகர்ப்புறங்களில் வேலையின்மை வீதம் 8.96 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.55 சதவீதமாகவும் இருக்கிறது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபரில் வேலையின்மை வீதம் 7.21 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வேலையினஅமை 8.04 சதவீதமாகவும் இருந்தது.
மாநிலங்கள் அளவில் ஹரியானாவில்அதிகபட்சமாக வேலையின்மை நிலவுகிறது. நவம்பரில் ஹரியானா மாநிலத்தில் வேலையின்மை 30.6 சதவீதமாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 24.5 சதவீதம் வேலையின்மையும், ஜம்மு காஷ்மீரில் 23.9 சதவீதமும், பீகாரில் 17.3 சதவீதமும், திரிபுராவில்14.5 சதவீதமும் வேலையின்மை நிலவுகிறது.
நவம்பர் ஜிஎஸ்டி வரி வசூல் 3.9 சதவீதம் குறைந்தது! அக்டோபரில் அதிகம்
வேலைன்மை அளவு மிகவும் குறைவாக சத்தீஸ்கரில் உள்ளது. சத்தீஸ்கரில் 0.1 சதவீதம் வேலையின்மையும், உத்தரகாண்டில் 1.2 சதவீதமும், ஒடிசாவில் 1.6 சதவீதமும், கர்நாடகாவில் 1.8சதவீதமும், மேகாலயாவில் 2.1 சதவீதமும் வேலையின்மை இருக்கிறது.
நாட்டின் வேலையின்மை அக்டோபரில் 7.77 சதவீதமாகவும், செப்டம்பரில் 6.43 சதவீதமாகவும் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.