Share Market Live Today: பாதாளத்தில் பங்குச்சந்தை!கடும் சரிவில் சென்செக்ஸ்,நிப்டி:அதானி பங்குகள் 17% வீழ்ச்சி

By Pothy RajFirst Published Jan 27, 2023, 9:47 AM IST
Highlights

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. 

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. 

சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் 17சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.

இந்த சூழலில் அதானி குழுமம் சார்பில் ரூ.20ஆயிரம் கோடிநிதி திரட்டுவதர்காக வெளிச்சந்தையில் கூடுதலாக அதானி குழுமம் இன்று பங்குகளை விற்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

சர்வதேச காரணிகள் சாதகமாகவே உள்ளன. அமெரிக்காவின் 2022ம் ஆண்டு 4வது காலாண்டில் நுகர்வோர் செலவிடுவது அதிகரித்துள்ளது, வேலையின்மையும் குறைந்துள்ளது சாதகமான அம்சமாக முதலீட்டாளர்கள் பார்க்கிறார்கள்.

இந்தியசந்தையில், பஜாஜ், மற்றும் டாடா மோட்டார்ஸ் 3வது காலாண்டு முடிவுகளும் சாதகமாக வந்துள்ளதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
இதில் ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குகள் கடும் அழுதத்தில் உள்ளன.

ஏறக்குறைய 17 சதவீத வீழ்ச்சியை அதானி குழுமத்தின் பங்குகள் இதுவரை சந்தித்துள்ளன. இதற்கிடையே ரூ.20ஆயிரம் கோடி கூடுதலாக நிதி திரட்ட FPO என்று அதானி குழுமம் வெளியிடுகிறது. இதற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

காலை வர்த்தகம் 250 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது நேரம் செல்லச் செல்ல இந்த சரிவு அதிகரித்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 484 புள்ளிகள் சரிந்து, 59,720 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 126 புள்ளிகள் குறைந்து, 17,765 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், 15 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 15 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன. டாடா மோட்டார்ஸ், ஐடிசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, நெஸ்ட்லே இந்தியா, மாருதி, டாடா ஸ்டீல், எச்சிஎல், விப்ரோ, இன்போசிஸ், லார்சன்டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிஆகிய பங்குகள் விலை குறைந்துள்ளன. பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், சிப்லா, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் போன்ற பங்குகள் விலை உயர்ந்துள்ளன

நிப்டியில் எப்எம்சிஜி, ஐடி, ஊடகத்துறை , மருந்துத்துறை, ரியல்எஸ்டேட், ஆட்டோமொபைல் துறைப் பங்குகள் லாபத்தில் உள்ளன. உலோகம், பொதுத்துறை வங்கித்துறை பங்குகள் சரிவில் உள்ளன

click me!