ஐபிஎம் நிறுவனத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வேலை பார்க்காத 3,900 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபிஎம் நிறுவனத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வேலை பார்க்காத 3,900 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஐபிஎம் நிறுவனமும் கடந்த புதன்கிழமை 3,900 பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை உறுதி செய்துள்ளது.
மாற்று முதலீடுகளை மேற்கொள்வதற்காக இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் சொல்கிறது. மேலும் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் ஆண்டு இறுதி மதிப்பீட்டின்போது அவர்களுக்குக் கொண்டுக்கப்பட்ட இலக்கை பூர்த்தி செய்யவில்லை என்றும் காரணம் கூறியுள்ளது.
கடந்த இரண்டு இரண்டை ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களை வேலையில் சேர்த்திருக்கிறோம் என்றும் இன்னும்கூட சில பிரிவுகளில் கூடுதல் பணியாளர்களைச் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் ஐபிஎம் நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது.
அந்த நிறுவனம் கணித்துள்ள ஆண்டு வருவாய் வளர்ச்சி ஒற்றை இலக்க அளவிலேயே உள்ளது. இதுவே சென்ற ஆண்டில் 12 சதவீதமாக இருந்திருக்கிறது. எனவே, மந்தநிலையைச் சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் மட்டும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், மைக்ரோசாப்ட், அமேசான், ஐபிஎம் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்த 44 ஆயிரம் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
Adani Group: ஒரேநாளில் ரூ.50,000 கோடி போச்சு! அதானி குழுமத்தை ஆட்டம் காண வைத்த ஹிண்டன்பர்க் அறிக்கை