Share Market Today: பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்ன?! சென்செக்ஸ், நிப்டி சரிவு ! Adani Ports  மீண்டது

By Pothy RajFirst Published Feb 6, 2023, 3:59 PM IST
Highlights

இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று சரிவுடன் தொடங்கி, வீழ்ச்சியில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிந்தன.

இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று சரிவுடன் தொடங்கி, வீழ்ச்சியில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிந்தன.

உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருவது, அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு நிலவரம் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டில் பணவீக்கத்தை குறைக்க பெடரல் ரிசர்வ் அடுத்துவரும் கூட்டத்திலும் வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. இதனால் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது.

இதனால் இன்று இந்தியப் பங்குச்சந்தையில் ஐடி துறைப் பங்குகள் மோசமாக வீழ்ந்தது சந்தையில் சரிவு ஏற்படக் காரணமாகும். 10 முக்கிய நிறுவனங்களில் 9 ஐடி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்தன. 

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி மந்தம்! அதானி பங்கு வீழ்ச்சி

அதானி குழுமத்தில் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலப் பங்கைத் தவிர மற்ற பங்குகள் விலை மேலும் சரிந்தன. அதானி போர்ட்ஸ் 3-ம் காலாண்டு முடிவுகள் வர இருப்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கியதால் இன்றைய வர்த்தகத்தில் பங்கு மதிப்பு உயர்ந்தது. 

அதானி குழுமத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் வேகமாக விற்பதும், விலை சரிந்து வருவதும் சந்தையில் நிலையற்றதன்மை ஏற்பட முக்கியக் காரணமாகும். இதைநிலை தொடர்ந்தால், அதானி குழுமம் வெளிநாடுகளில் பெறுவதுகடினம் என்று மூடிஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், இந்தியப் பங்குச்சந்தையிலும் இந்த தாக்கம்காலை முதல் இருந்ததால் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. வரும் புதன்கிழமை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நடக்க இருப்பதால் வட்டிவீத உயர்வு குறித்து முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை அமெரிக்கப் பங்குச்சந்தையிலிருந்து நீக்குகிறது டோவ் ஜோன்ஸ்(S&P Dow Jones)

இதனால் காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை மாலை வர்த்தகம் முடியும்வரை மீளவில்லை. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 334 புள்ளிகள் குறைந்து, 60,506 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 89 புள்ளிகள் சரிந்து,17,764 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில், 7 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன, மற்ற நிறுவனங்களின் பங்குவிலை வீழ்ச்சி அடைந்தன.இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ்பைனான்ஸ், பவர்கிரிட், ஐடிசி, பஜாஜ்பின்சர்வ், என்டிபிசி, நெஸ்ட்லேஇந்தியா பங்குகள் விலை உயர்ந்தன.

நிப்டியில் கட்டுமானம், எப்எம்சிஜி,பொதுத்துறை வங்கித்துறை பங்குகள் மட்டுமே ஓரளவுக்கு உயர்ந்தன.உலோகம், ஊடகம், மருந்துத்துறை, ஆட்டோமொபைல், ஐடி துறை பங்குகள் சரிந்தன.


 

click me!