share market today: பாதாளத்தில் பங்குச்சந்தை! முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி இழப்பு! சென்செக்ஸ் படுவீழ்ச்சி

By Pothy RajFirst Published Sep 16, 2022, 4:45 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தையில் கரடியின் ஆதிக்கம் இன்று கொடிகட்டிப் பறந்தது. சென்செக்ஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்டபுள்ளிகள் வீழந்ததால், முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தையில் கரடியின் ஆதிக்கம் இன்று கொடிகட்டிப் பறந்தது. சென்செக்ஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்டபுள்ளிகள் வீழந்ததால், முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மும்பைப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.285.90லட்சம் கோடி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்து, ரூ.279.80 லட்சம் கோடியாகச் சரிந்தது.
மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,039 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து,

உலகின் 2-வது கோடீஸ்வரராக உயர்ந்தார் கெளதம் அதானி: ஃபோர்ப்ஸ் பட்டியல்

58,840 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. ஏறக்குறைய 1.82 சதவீதம் சரிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 346 புள்ளிகள் அல்லது 1.94% வீழ்ந்து, 17,530 புள்ளிகளில் முடிந்தது. 

காரணம் என்ன

சர்வதேசந்தையில் நிலவிய உறுதியற்ற சூழல், அழுத்தம் ஆகியவை இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது. ஆசியச் சந்தைகளான கோஸ்பி, நிக்கி, ஹாங் செங் ஆகியவையும் சரிந்தன. அமெரிக்க பங்குச்சந்தையும் நேற்று வீழ்ச்சி அடைந்தது உலகம்முழுவதும் எதிரொலித்தது.

சீன லோன் ஆப்ஸ்: பேடிஎம், ரேசர்பே செயலிகளின் ரூ.46 கோடி முடக்கம்: அமலாக்கப்பிரிவு அதிரடி

அமெரிக்காவில் நிலவும் உயர்ந்த  பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தினாலும் குறையவில்லை. ஆதலால் இந்த முறை கடினமான உயர்வு இருக்கும் என்று பெடரல் வங்கித் தலைவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தினால், உலக நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக டாலர் மதிப்பு வலுப்பெறும், சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது.

தங்கம் விலை இவ்வளவு குறைவா!சவரனுக்கு ரூ.36,000க்கு கீழ் செல்லுமா? இன்றைய நிலவரம் என்ன?

இது மட்டுமல்லாமல் உலக வங்கி, சர்வதேச செலவாணி நிதியம் ஆகியவை, உலகளவில் பொருளாதாரப் பெருமந்தம் உருவாகும் சூழல் இருப்பதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளன. இதுமுதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதலீட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக பங்களை விற்பனை செய்தனர். இதனால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் பங்குகள் மதிப்பு பாதாளத்துக்கு சென்றது

பெருத்த அடி

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் 2 முதல் 3% வரை  சரிந்தன.

 மும்பைப் பங்குச்சந்தையில் 30 முக்கியப் பங்குகளில் இன்டஸ்இன்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி பங்குகள் மட்டுமே இழப்பில்லாமல் தப்பித்தன. மற்ற 28 பங்குகளும் சரிவில் முடிந்தன. 

தேசிய பங்குச்சந்தையில் வங்கி, பொதுத்துறை வங்கிகள், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், உலோகம், ரியல்எஸ்டேட்  ஆகிய துறைகளின் பங்குகளும் கடுமையாகச் சரிந்தன. 


 

click me!