
வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தை கடும் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிந்துள்ளன.
அமெரி்க்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச சந்தைகள் மந்தமாக உள்ளன. இதன் எதிரொலி இந்தியச்ச ந்தையிலும் இன்று காலை முதல் இருந்து வருகிறது. இதனால் காலை முதலே வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
மீண்டது பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: அதானி பங்குகள் கடும் வீழ்ச்சி
ஆசியப் பங்குச்சந்தையும் இன்று காலை முதல் சரிவுடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. இதையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 219 புள்ளிகள் குறைந்து 60,583 புள்ளிகளிலும், நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 17820 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து நெருக்கடியில் உள்ளன. அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி க்ரீன், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட பங்குகள் விலை இன்று காலை முதல் சரிந்துள்ளன. அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களில் 9 நிறுவனப் பங்குகள் வீழ்ந்துள்ளன, அதானி போர்ட் மட்டும் ஏற்றத்தில் உள்ளது.
பங்குச்சந்தையில் Adani என்டர்பிரைசர்ஸ் பங்கு 15% வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி சரிவு
மும்பை பங்கு்சசந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில் 12 நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன, மற்ற 18நிறுவனப் பங்குகள் இழப்பில் உள்ளன. மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, லார்சன் அன்ட் டூப்ரோ, பவர்கிரிட், சன்பார்மா,இன்டஸ்இன்ட் வங்கிபங்குகள் லாபத்தில் உள்ளன.
நிப்டி துறையில் பொதுத்துறை வங்கி, ஊடகத்துறை பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்ற அனைத்து துறைப் பங்குகளும் சரிந்துள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.