Share Market Today: மீண்டது பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: அதானி பங்குகள் கடும் வீழ்ச்சி

By Pothy RajFirst Published Feb 9, 2023, 4:03 PM IST
Highlights

இந்தியப் பங்குச்சந்தைகள் காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி மாலை ஏற்றத்துடன் முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்தன.

இந்தியப் பங்குச்சந்தைகள் காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி மாலை ஏற்றத்துடன் முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்தன.

அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ் நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. 
ரிசர்வ் வங்கி நேற்று வட்டிவீதத்தை உயர்த்தியது, பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் என்ற அறிவிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பி்க்கை அளித்தது. இதனால் நேற்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது.

பங்குச்சந்தையில் Adani என்டர்பிரைசர்ஸ் பங்கு 15% வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி சரிவு

ஆனால், அமெரி்க்க பெடரல் ரிசர்வ், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், வட்டிவீதம் உயர்வு அவசியம், வரும் காலத்தில் வட்டி உயர்வு இருக்கும் என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியப் பங்கு்சசந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டா எடுப்பது அதிகரித்து வருகிறது. டாலர் மதிப்பு மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

கடந்த இரு நாட்களாக சரிவிலிருந்து மீண்ட அதானி குழுமப் பங்குகள் இன்றும் மீண்டும் வீழ்ந்தன. 
மாலைவர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து, 60,806 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 21 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17,893 புள்ளிகளில் முடிந்தது. 

மும்பை பங்குசந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 13 நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. 17 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

அதானி நிறுவனத்தில் ரெய்டு! வரிஏய்ப்பு புகாரால் இமாச்சலப் பிரதேச கலால்வரி துறை சோதனை

நிப்டியில் முதலீட்டுப் பொருட்கள் மற்றும் ஐடி துறையைத் தவிர அனைத்து துறைகளும் ஏற்றத்தில் முடிந்தன. அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், சிப்லா, ஜேஎஸ்டபிள்யு ஆகிய நிறவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. பஜாஜ் பின்சர்வ், எச்டிஎப்சி லைப், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ் பங்குகள் விலை உயர்ந்தன

click me!