அதானி குழுமத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனக் கடைகள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, இமாச்சலப்பிரதேச மாநில கலால் மற்றும் வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
அதானி குழுமத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனக் கடைகள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, இமாச்சலப்பிரதேச மாநில கலால் மற்றும் வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
அதானி வில்மர் ஸ்டோர்களில் புதன்கிழமை இரவு கலால் மற்றும் வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சேமிப்பு கிட்டங்கியில் இருந்த பொருட்கள் இருப்பு, ஆவணங்களை ஆய்வு செய்தனர், சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த பணம் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இந்த ரெய்டு நள்ளிவரவு வரை தொடர்ந்துள்ளதுஎனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
அதானி மகன், முகேஷ் அம்பானி மகனுக்கு புதிய பதவி: மகாராஷ்டிரா அரசு உத்தரவு
அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனம் கூட்டாக அதானி வில்மர் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் அதானி குழுமத்துக்கு சொந்தமாக 7 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகப்பெரிய அளவில் பலசரக்கு பொருட்களை சப்ளை செய்யும் பணியில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன
இதற்கிடையே அதானி குழுமத்திந் ஏசிசி லிமிடட் பிலாஸ்பூர் மாவட்டத்திலும் அம்புஜா சிமெண்ட் தொழிற்சாலை சோலன் மாவட்டத்திலும் உள்ளன. இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு
லாரி உரிமையாளர்கள் அதிகமான கட்டணம் கேட்டதால் சிமெண்ட் உற்பத்தியை நிறுத்திய அதானி குழுமம் நிரந்தரமாக மூடப்போவதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, அதானி குழுமத்திடமும், தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்களிடமும் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இமாச்சலப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதானி குழுமம், இமாச்சலப்பிரதேசத்தில் குளிர்பதனக் கிட்டங்கி முதல் பலசரக்கு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் என 7 நிறுவனங்களை நடத்தி வருகிறது. கடந்த 3வது காலாண்டில் இந்த நிறுவனங்கள் ரூ.246 கோடி லாபம் ஈட்டியன.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடி குறித்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின், அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் மளமளவெனச் சரிந்தன. கடந்த 10 நாட்களி்ல் மட்டும் அதானி குழுமத்துக்கு ரூ.10 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் விலை உயர்ந்து வந்தது, இன்று பங்குச்சந்தையில் மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.