Share Market Today: பங்குச்சந்தையில் Adani என்டர்பிரைசர்ஸ் பங்கு 15% வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி சரிவு

By Pothy RajFirst Published Feb 9, 2023, 9:58 AM IST
Highlights

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் காலையில் வீழ்ச்சியுடன் உள்ளன.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் காலையில் வீழ்ச்சியுடன் உள்ளன.

அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் கடந்த சில நாட்களாக உயர்ந்தநிலையில் இன்றுகாலை வர்த்தகத்தில் 15% வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் பங்குகளும் சரிவில் உள்ளன. அதானி வில்மர் நிறுவனப் பங்கு மட்டும் உயர்வுடன் உள்ளன.

பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ், நிப்டி ஏற்றம்: அதானி பங்ககுள் எழுச்சி

ரிசர்வ் வங்கி நேற்று வட்டிவீதத்தை உயர்த்தியது, பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் என்ற அறிவிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பி்க்கை அளித்தது. இதனால் நேற்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது.

ஆனால், அமெரி்க்க பெடரல் ரிசர்வ், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், வட்டிவீதம் உயர்வு அவசியம், வரும் காலத்தில் வட்டி உயர்வு இருக்கும் என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியப் பங்கு்சசந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டா எடுப்பது அதிகரித்து வருகிறது. டாலர் மதிப்பு மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. 

இதனால் இன்று காலை வர்த்தகம் மிகுந்த ஏமாற்றத்துடன், சரிவுடன் தொடங்கியது. காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 151 புள்ளிகள் குறைந்து, 60,510 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 64 புள்ளிகள் சரிந்து, 17,807 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்றம்! சென்செக்ஸ், நிப்டி ஜோர்: ஆர்பிஐ மீது எதிர்பார்ப்பு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 14 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 16நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன.  டாடா ஸ்டீல், இன்போசிஸ், சன்பார்மா,ஏசியன்பெயின்ட்ஸ், எச்டிஎப்சி, டைட்டன், லார்சன் அன்ட்டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி,எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளன. 

நிப்டியில் துறையில் எப்எம்சிஜி துறைப் பங்குகளைத் தவிர அனைத்து துறைப் பங்குகளும் சரிவில் உள்ளன. எஸ்பிஐ காப்பீடு, ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், டிவிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், பவர்கிரிட் ஆகிய பங்குகள் விலை உயர்ந்துள்ளன. அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், மாருதி சுஸூகி, டெக் மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ் பங்குகள் விலை சரிந்துள்ளன

click me!