
இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் கடைசிநாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ந்தன.
அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு மதிப்பு 5 சதவீதம் சரிந்தது.அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்தநிலை வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக எழுந்த செய்தியால், அந்நாட்டுப் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது. பெடரல் ரிசர்வும் வட்டிவீதத்தை வரும் காலங்களில் உயர்த்தும் என்ற செய்தியும் முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி! பங்குச்சந்தையில் கடும் ஊசலாட்டம்
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் சுணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதற்கு அதானி குழுமப் பங்குகள் மதிப்பு குறைந்தது முக்கியக் காரணமாகும்.
ஜனவரி மாதத்துக்கான சில்லறைப் பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வரும் திங்கள்கிழமை வெளியாகிறது. இதில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும்பட்சத்தில்வரும் ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பு குறைவு. ஆதலால் முதலீட்டாளர்கள் சில்லறை பணவீக்க விவரங்களை எதிர்பார்த்துள்ளனர்.
காலையிலிருந்தே சுணக்கமாகவும், மந்தமாகவும் தொடங்கிய பங்குச்சந்தையில் மீட்சி இருந்தாலும் அதை தொடரமுடியவில்லை. மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 124 புள்ளிகள் குறைந்து, 60682 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 37 புள்ளிகள் சரிந்து, 17,857 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதானி நிறுவனத்தில் இமாச்சலப்பிரதேச கலால் வரித்துறை ரெய்டு: அதானி வில்மர் விளக்கம்
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 12 நிறுவனப் பங்குகள் லாபமீட்டின, 18 நிறுவனப் பங்குகள் சரிந்தன. டாடா மோட்டார்ஸ், சன்பார்மா,பார்திஏர்டெல், டைட்டன்,எச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி, பவர்கிரிட், டெக்மகிந்திரா பங்குகள் லாபத்தில் முடிந்தன.
நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், கோல் இந்தியா பங்குகள் மதிப்பு சரிந்தது. டாடா மோட்டார்ஸ், யுபிஎல், சிப்லா, ஹீரோ மோட்டார், லார்சன் அன்ட் டூப்ரோ பங்குகள் விலை உயர்ந்தன.
நிப்டியில் எரிசக்தி, உலோகத்துறை பங்குகள் சரிந்தன, ரியல்எஸ்டேட் துறை பங்குமதிப்பு உயர்ந்தது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.