ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI) வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி விதிமுறையை பின்பற்றாவிட்டால், அவர்களின் சேமிப்புக் கணக்கு முன்அறிவிப்பின்றி முடக்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI) வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி விதிமுறையை பின்பற்றாவிட்டால், அவர்களின் சேமிப்புக் கணக்கு முன்அறிவிப்பின்றி முடக்கப்படுகிறது.
நடுராத்திரி ஷாப்பிங்ணா இப்படியா!: திருவனந்தபுரம் லூலு மாலை திணறவைத்த மக்கள்
ஏற்கெனவே ஏராளமானோரின் வங்கிக்கணக்குகள் கேஒய்சி விதிமுறையை பின்பற்றாமல் முடக்கப்பட்டுள்ளன. ஆதலால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியில் தனது கேஒய்சி நடைமுறையை முடித்துவிட்டதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் தனது சேமிப்புக் கணக்கு முடக்கப்பட்டதாகவும், பரிமாற்றத்தில் ஈடுபடமுடியவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அதற்கு எஸ்பிஐவங்கி அளித்த பதிலில் “ ரிசர்வ் வங்கி விதிப்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் வாடிக்கையாளர்கள் தங்களின் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்வது அவசியம். இதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
எஸ்எம்எஸ்,ஆன்லைன், வங்கிக்கிளைக்கு நேரடியாக வந்து அப்டேட் செய்யலாம். வங்கியின் கிளையின் மின்அஞ்சல் முகவரிக்கு கூட ஆவணத்தை அணுப்பலாம்”எ னத் தெரிவித்துள்ளது.
ஹூவாய் நிறுவனமும் சிக்குகிறது? ரூ.750 கோடிக்கு கணக்கு கேட்கும் வருமானவரித்துறை
மற்றொரு வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ வங்கி அளித்த பதிலில் “ கேஒய்சி நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவேளைஉங்கள் சேமிப்புக்க ணக்கு முடக்கப்பட்டிருந்தால், வங்கிக்கிளைக்கு நேரடியாகச் சென்று தேவையான ஆவணங்களை அளித்து கணக்கை ஆக்டிவேட் செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளது.
கேஒய்சி விவரங்களை எவ்வாறு அப்டேட் செய்வது
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் முகவரி, அடையாள அட்டை ஆகியவற்றை நகல் எடுத்து, வங்கி கிளைக்கு நேரடியாகவோ அல்லது மின்அஞ்சல் மூலமோ கேஒய்சி விவரங்களை அப்பேட் செய்யக் கூறலாம். ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய விரும்பினால், வங்கிக்கு நீங்கள் அளித்துள்ள அதிகாரப்பூர்வ மின்அஞ்சல் மூலம் ஆவணங்களை அனுப்பலாம்.
எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, “ பாஸ்வோர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, என்ஆர்இஜிஏ கார்டு, பான் கார்டு, வீட்டு முகவரிக்கான சான்று ஆகியவற்றை வழங்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான கேஒய்சி
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு அல்லது, வைப்புநிதிக்கணக்கு இருந்தாலும், அவர்களின் பாதுகாவலர் அல்லது பெற்றோர் இதே நடைமுறையைப் பயன்படுத்தி, ஆதார் கார்டு,முகவரிச் சான்றை அளிக்கலாம்.
சித்ராவுக்கு சோதனைக்கு மேல் சோதனை! சிக்கினார் சஞ்சய்: சிபிஐ புதிய வழக்கு:
என்ஆர்ஐ கணக்கு வைத்திருப்போர் என்ன செய்யலாம்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருந்தால், அவர்கள் தங்களின் பாஸ்போர்ட், தங்குமிடத்துக்கான விசா நகல் ஆகியவற்றை வெளியுறவுத்துறை அதிகாரியின் கையொப்பம் அல்லது நோட்டரி பப்ளிக் கையொப்பம், தூதரக அலுவலகத்தில் கையொப்பம் பெற்று அனுப்பலாம்.