டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் 4,400 கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் 4,400 கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சித்ராவுக்கு சோதனைக்கு மேல் சோதனை! சிக்கினார் சஞ்சய்: சிபிஐ புதிய வழக்கு:
இந்த செய்தியையடுத்து, அமெரிக்கச் சந்தையில், ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதம் சரிந்தன. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவாரா என்பது குறித்து புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வாஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்ட செய்தியில் “ எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் போலிக்கணக்குகளை இன்னும் ஆய்வு செய்யவில்லை. இரு நிறுவனங்களுக்கு இடையே, ஒப்பந்தம் குறித்த பேச்சும் நிறுத்தப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனர் மஸ்க்கிற்கு இந்த ஒப்பந்தம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
ஹூவாய் நிறுவனமும் சிக்குகிறது? ரூ.750 கோடிக்கு கணக்கு கேட்கும் வருமானவரித்துறை
இந்தத் தகவல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் வெளியானதும் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கின.
இதையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ எலான் மஸ்க் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் கோரும் அனைத்து விவரங்களையும் தருவோம். அதற்கு ட்விட்டர் நிறுவனம் முழு ஒத்துழைப்பு தரும். எலான் மஸ்க், ட்விட்டர் இடையிலான ஒப்பந்தம், அனைத்து பங்குதாரர்களின் நலனுக்கானது என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே, ட்விட்டர், மஸ்க் இடையிலான ஒப்பந்தம் முறியும் தகவல் வெளியானதையடுத்து, ட்விட்டர் நிறுவனம், தினசரி 10லட்சம் போலிக் கணக்குகளை நீக்கப் போவதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை.
ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது.
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் திடீரென தெரிவித்தார்.
அய்யோ! அந்த ப்ளைட்டா! ஸ்பைஸ்ஜெட்டை கண்டு தெறித்து ஓடும் பயணிகள்
ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்குடனான ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டதேத்தவிர அந்தவிவரங்களை வழங்கவில்லை. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வரப் போவதாக தகவல் வெளியான நிலையில் இந்த களேபரங்கள் நடந்தன