உக்ரைன் ரஷ்யா போர்: அடுத்த 2 ஆண்டுகளில் தங்கம் விலை எவ்வளவு உயரக்கூடும்?

By Pothy RajFirst Published Feb 25, 2022, 1:14 PM IST
Highlights

உக்ரைன் ரஷ்யப் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வால் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்துடன் நகர்ந்து வருகிறது. அடுத்த2 ஆண்டுகளில் தங்கம் விலை எந்த அளவு உயரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன

உக்ரைன் ரஷ்யப் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வால் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்துடன் நகர்ந்து வருகிறது. அடுத்த2 ஆண்டுகளில் தங்கம் விலை எந்த அளவு உயரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன

உக்ரைன்-ரஷ்யா போரால் நேற்று பங்குச்சந்தையிலும் கடும் சரிவு காணப்பட்டது. மும்பைபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,700 புள்ளிகளை இழந்தது, நிப்டி 800க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒரேநாளில் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்கள்வரை தங்கம் விலையில் குறைவான ஏற்ற இறக்கங்கள் மட்டுமே இருந்தநிலையில், உக்ரைன்-ரஷ்யா பதற்றம் ஏற்பட்டபின் பெரியஅளவில் விலை மாற்றம் ஏற்படத் தொடங்கியது. பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக தங்கத்தின் பக்கம் கவனத்தை திருப்பியதால் தங்கத்தின் விலை ஏறத்தொடங்கியது.

அதிலும் உக்ரைன்-மீது ரஷ்யா போர் தொடுத்தபின் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரண் ரூ.1,800க்கும் மேல் அதிகரி்த்தது.

இந்நிலையில் இதேபோக்கில் சென்றால், தங்கத்தின் விலை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10ஆயிரம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்களும், கமாடிட்டி மார்க்கெட் வல்லுநர்களும் தெரிவிக்கின்றனர்

ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் பிரிவின் மூத்த ஆய்வாளர் தபான் படேல் கூறுகையில் “ உக்ரைன் ரஷ்யா போர் பதற்றத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும் டாலர்கள் மீதும் முதலீட்டை திருப்புகிறார்கள். இதேநிலை நீடித்தால் ஏப்ரல் மாதத்துக்குள் தங்கம் விலை 10 கிராம் 2.25%உயர்ந்து ரூ.51,500 மாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டுக்குள் ரூ.55ஆயிரமாகவும், அடுத்த ஆண்டில் ரூ.62 ஆயிரமாகவும் உயரும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்

நிமால் பாக் நிறுவனத்தின் கமாடிட்டி ஆய்வகப்பிரிவின் தலைவர் குணால் ஷா கூறுகையில் “ இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கிாரம் தங்கத்தின் விலை ரூ.55ஆயிரத்தை நெருங்க வாய்ப்புள்ளது.  அடுத்த ஆண்டில் ரூ.62 ஆயிரம்வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கிறோம்.

சராசரியாகப்பார்த்தால் அடுத்தத 2ஆண்டுகளில் தங்கம் 10 கிராம்மீது ரூ.10ஆயிரம் விலை ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்
 

click me!