தங்கம் விலை திடீரென குறைவு ஏன்? தங்கம் வாங்க சரியான நேரமா? நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி விளக்கம்

By Pothy RajFirst Published Feb 25, 2022, 12:10 PM IST
Highlights

தங்கம் விலை நேற்று சவரணுக்கு ரூ.1800வரைஉயர்ந்த நிலையில் இன்று  விலை திடீரென  குறைந்துள்ளதற்கு காரணம் குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். 

தங்கம் விலை நேற்று சவரணுக்கு ரூ.1800வரைஉயர்ந்த நிலையில் இன்று  விலை திடீரென  குறைந்துள்ளதற்கு காரணம் குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யப் போர், சர்வதேச அளவில் பதற்றமான சூழல், உலகப் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் ஆகிய சூழல்களுக்கு மத்தியில் தங்கம் விலையும் ஏறி, இறங்கி வருகிறது. 

கடந்த சில மாதங்கள்வரை தங்கம் விலையில் குறைவான ஏற்ற இறக்கங்கள் மட்டுமே இருந்தநிலையில், உக்ரைன்-ரஷ்யா பதற்றம் ஏற்பட்டபின் பெரியஅளவில் விலை மாற்றம் ஏற்படத் தொடங்கியது. பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக தங்கத்தின் பக்கம் கவனத்தை திருப்பியதால் தங்கத்தின் விலை ஏறத்தொடங்கியது.  

அதிலும் உக்ரைன்-மீது ரஷ்யா போர் தொடுத்தபின் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரண் ரூ.1,800க்கும் மேல் அதிகரி்த்தது. 

ஆனால், திடீரென தங்கத்தின் விலை இன்று காலை சவரணுக்கு ரூ.1200 குறைந்துள்ளது. ;சென்னையில் இன்றுகாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.4,801 ஆகவும், சவரண் ரூ.38,408ஆகவுமஇருக்கிறது. தங்கம் விலையில் இந்த திடீர் ஏற்றத்தாழ்வுக்கு காரணம் என்ன, தங்கம் வாங்க இது சரியான நேரமா, முதலீட்டுக்கு உகந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளர் சாந்தகுமார் (கோல்டுகுரு) ஏசியாநெட் தமிழ் இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இதற்கு முந்தைய நாட்களில் தங்கத்தின் விலையில் சிறிய அளவில் மாற்றம்  மட்டுமே இருந்துவந்தது. அதாவது கிராமுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை மட்டுமே ஏற்றம், இறக்கம் இருக்கும். ஆனால், எப்போது ரஷ்யா-உக்ரைன் போர் மூளும் சூழல் இருப்பதாக செய்தி வெளியானதோ அதிலிருந்து தங்கத்தின் விலை ஏறத்தொடங்கியது.

அதிலும் உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்தபின் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கிடுகிடுவென உயர்ந்தது. இன்று நேற்றுமட்டுல்மல்ல, சர்வதேசஅளவில் பதற்றமான சூழல் ஏற்படும்போதெல்லாம் தங்கத்தின் விலை கடந்த காலங்களில் கிடுகிடுவென உயந்திருக்கிறது.

 2-ம் உலகப்போரின்போது கூட தங்கம் விலை உயர்ந்தது. ஆப்கானிஸ்தான் போர், இஸ்ரேல் போர் போன்ற போர் காலங்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஏனென்றால் போரக்காலங்களில் மக்கள் இடம் விட்டு  புலம்பெயர்ந்து செல்லும்போது, அவர்கள் பணமாக கையில் வைக்காமல் தங்கத்தை எடுத்துக்கொண்டு செல்வார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும், விலை உயரும்.

அதுமட்டுமல்லாமல் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது முதலீட்டை திருப்புவதாலும் விலை அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் தங்கத்தின் விலையை யாராலும் தீர்மானிக்க முடியாது, விலை திடீரென உயரும்,திடீரெனச் சரியும். தங்கம் விலை உயர்வதற்கு புவிஅரசியல் சூழல் எப்படி காரணமோ அதுபோலத்தான் குறைவுக்கும் காரணம்

தங்கத்தின் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, பிற்பகலில் மேலும் ரூ.100 உயர்ந்தது. ஆனால், திடீரென நள்ளிரவிலிருந்து கிராமுக்கு ரூ.150 குறையத் தொடங்கி இன்று காலை சவரணுக்கு ரூ.1200 குறைந்திருக்கிறது. தங்கம் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு சரி்ந்து ரூ.75க்கு மேல் சரி்ந்துவிட்டது. இதனால் தங்கம் விலையிலும் ஏற்றம் இருந்தது.
 

தங்கம் விலை வரும் நாட்களில் உயருமா அல்லது குறையுமா அல்லது ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்குமா?

இப்போதைக்கு இந்த ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால், போர் பதற்றம் குறைந்துவிட்டாலோ அல்லதுபோர் முடிவுக்கு வந்தாலோ தங்கத்தின் விலையும் குறையத்தொடங்கும். இப்போது தங்கத்தின் விலை என்பது அதிகபட்சம்தான். போருக்குப்பின் மற்ற துறைகள் அனைத்தும் மீட்சி நிலைக்கு வந்துவிட்டால் தங்கத்தின் விலையும் குறையும், இல்லாவிட்டால் மீண்டும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவார்கள்


 

தங்கத்தின் மீது முதலீடு செய்ய இது சரியான நேரமா, தங்கம் வாங்கலாமா?

தங்கத்துக்கத்தின் விலையை யாராலும நிர்ணயிக்க முடியாது. அசாதாரணசூழல்தான் நிர்ணயிக்கும். போர்பதற்றம், ஒரு நாடு தன்னுடைய பொருளாதார மீட்சிக்காக தங்கத்தை சந்தையில் விற்பதால் தங்கம் விலை குறையும்.

 மக்களுக்கு நாங்கள் சொல்வது, மக்கள் தங்களிடம் இருக்கும் ப ணத்தை தாராளமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம், கடன்வாங்கி முதலீடு செய்யாதீர்கள். வீட்டில் திருமணம் உள்ளிட்ட நல்ல விஷேசங்கள் வைத்திருந்தால், தங்கம் வாங்கும் தேவையிருந்தால், தாமதிக்க வேண்டாம் தாராளமாக தங்கம் வாங்கலாம். இப்போதுள்ள சூழலில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நீண்டகாலப் போக்கில் தங்கம் விலை உயரத்தான் செய்யும். ஆதலால், மக்கள் தாராளமாக தங்கம் வாங்கலாம், முதலீடுசசெய்யலாம்.
இவ்வாறு சாந்தகுமார் தெரிவித்தார்

 

click me!