150 கி.மீ. ரேன்ஜ், 80 கி.மீ. வேகம் - சூப்பர் அம்சங்களுடன் E ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் ஒகினவா

By Kevin KaarkiFirst Published Feb 25, 2022, 11:32 AM IST
Highlights

ஒகினவா நிறுவனம் தனது புதிய ஒகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஒகினவா மார்ச் 24 ஆம் தேதி ஒகி 90 (okhi 90) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய  ஒகி 90 அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இந்தியாவில் ஒகினவா நிறுவனம் குறைந்த மற்றும் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஒகினவா ஒகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய ஒகினவா ஒகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் முன்புறம் அகலமான கவுல், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. இண்டிகேட்டர்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. 

இத்துடன் குரோம் கார்னிஷ் செய்யப்பட்ட ரியர்வியூ மிரர்கள், ஸ்டெப்டு-அபப் பில்லியன் சீட், கிராப் ரெயில், அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட் வழங்கப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு மற்றும் தோற்றம் மோட்டார்சைக்கிள் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதுமட்டுமின்றி ஸ்கூட்டரின் ஸ்பீடு, ரேன்ஜ், பேட்டரி சார்ஜ் விவரங்களை காண்பிக்கும் எல்.இ.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. 

இந்த ஸ்கூட்டரில் கனெக்டெட் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் செயலிக்கான வசதி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வெஹிகில் அலெர்ட்கள், ஜியோ-ஃபென்சிங், இ-கால் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஒகினவா ஒகி 90 மாடலில் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. 

மேலும் முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 150 கிலோமீட்டர் வரை செல்லும். இந்திய சந்தையில் புதிய ஒகி 90 மாடல் ஓலா எஸ்1, சிம்பில் ஒன், பஜாஜ் செட்டாக், டி.வி.எஸ். ஐ கியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த ஸ்கூட்டரின் விலை மற்ற பிராண்டு மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணம் செய்யப்படும் என தெரிகிறது.

click me!