உக்ரைன்-ரஷ்ய போர்: எல்ஐசி பங்கு விற்பனை திட்டமிட்டபடி நடக்குமா, தாமதமாகுமா?

Published : Feb 25, 2022, 11:07 AM IST
உக்ரைன்-ரஷ்ய போர்: எல்ஐசி பங்கு விற்பனை திட்டமிட்டபடி நடக்குமா, தாமதமாகுமா?

சுருக்கம்

நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் ஐபிஓ விற்பனை மார்ச் 11ம் தேதி நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர், சர்வதேச பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்படுமா அல்லது திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் ஐபிஓ விற்பனை மார்ச் 11ம் தேதி நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர், சர்வதேச பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்படுமா அல்லது திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100% பங்குகளில் வெறும் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கு ஐஆர்டிஏஐ ஒப்புதல் அளித்த நிலையில்  வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. இந்த அறிக்கைக்கு பிஎஸ்இ, என்எஸ்இ அமைப்பும் , செபியும் ஒப்புதல் அளித்துவிட்டன. 

மத்திய அரசு  5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை(870 கோடி டாலர்) திரட்ட  திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன. 

இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. அதாவது எல்ஐசியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரையிலும், பாலிசிதாரர்களுக்கு 5 % வரையிலும் தள்ளுபடி தரப்படலாம் எனத் தெரிகிறது.
எல்ஐசி ஐபிஓ விற்பனை குறித்து மத்திய அரசு சார்பிலும், எல்ஐசி நிறுவனம் சார்பிலும் தேதி உறுதியாக அறிவிக்கப்படாதநிலையில், மார்ச் 11ம் தேதி நடக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்துள்ளதால் சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்துள்ளது. இந்தியப்பங்குச்சந்தையில் நேற்று மட்டும் ரூ.13 லட்சம் கோடிக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால்,இன்று மும்பை, தேசியப்பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நடக்கிறது. இவ்வாறு நிலையற்ற சூழல் நிலவுகிறது

இதனால் மார்ச் மாதம் திட்டமிட்டபடி எல்ஐசி ஐபிஓ நடைபெறுமா அல்லது தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
ஆனால், இதுகுறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில் “ எல்ஐசி  ஐபிஓ வெளியீட்டை மத்தியஅரசு திட்டமிட்டபடி நடத்தும். சந்தையில் நிலையற்ற தன்மை இருந்தாலும், உலகச் சூழல், வேறு காரணிகள்இருந்தாலும் ஐபிஓ நடக்கும்” எனத் தெரிவித்தார்

ஆனால் இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில், “ சர்வதேச சூழல், உக்ரைன்-ரஷ்ய போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சந்தை நிலவரங்களையும் பார்த்துவருகிறது. ஐபிஓவு வெளியீட்டுக்கு நாட்கள் அதிகம் இருப்பதால், மத்தியஅ ரசு எந்த முடிவையும் இப்போதைக்கு எடுக்காது” எனத் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பங்குச்சந்தை வட்டாரங்கள் கூறுகையில் “ எல்ஐசி ஐபிஓ வெளியீடு திட்டமிட்ட தேதியில் நடக்க அதிகமான வாய்ப்புள்ளது. மத்திய அரசுக்கு மார்ச் முதல்வாரம் வரை அவகாசம் இருக்கிறது, அதற்குள் எந்த முடிவையும் எடுக்கும். எல்ஐசி ஐபிஓ வெளியிட்டில் பெரிதாக உக்ரை-ரஷ்யா போர் பாதிப்பை ஏற்படுத்தாது” எனத் தெரிவித்தன

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த வாரம் 4 நாட்கள் வங்கி விடுமுறை.. தேதிகளை மறக்காம நோட் பண்ணுங்க மக்களே
Rupee Value: இந்திய ரூபாய் மதிப்பு சரிய காரணம் இதுதான்.! இதனால் இவ்ளோ பாதிப்பா?!