இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலரின் உறுதியான மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை காரணமாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக சரிந்து, வரலாறு காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வியாழன் அன்று இந்திய ரூபாய் மதிப்பு 9 பைசா சரிந்து இதுவரை காணாத குறைந்தபட்சமான 83.22 ஐத் தொட்டது. அமெரிக்க டாலரின் உறுதியான மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு பங்குச் சந்தைகளில் நேர்மறையான போக்கு, ரூபாயின் மதிப்பு சறுக்கலுக்கு ஒரு ஆறுதலாக அமைகிறது என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு டிசம்பர் வரை விநியோகக் குறைப்பை நீட்டிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டாலரைத் தாண்டியது.
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 83.15 ஆகத் தொடங்கியது. 83.12 முதல் 83.22 வரை வர்த்தகம் செய்யப்பட்டது. முடிவில் இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக மிகக் குறைந்தபட்சத்தை 83.22 எட்டி முடிவடைந்தது. முந்தைய வர்த்தக முடிவில் இருந்ததை விட 9 பைசா வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
எல்எல்ஏ, அமைச்சர்களுக்கு ரூ.40,000 சம்பள உயர்வு! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
புதன்கிழமை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் குறைந்து 83.13 ஆக இருந்தது. முன்னதாக, ஆகஸ்ட் 21 அன்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதே 83.13 ஆக இருந்தது.
"பலமான டாலர் மதிப்பு மற்றும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை ஆகியவை ரூபாய் மதிப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கவலைகளும் ரூபாயின் மதிப்பு குறைய காரணமாக இருக்கலாம்" என்று வல்லுநர்கள் சொல்கின்றனர்.
இதனிடையே, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.39 சதவீதம் விலை குறைந்து ஒரு பீப்பாய்க்கு 90.25 அமெரிக்க டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது.
உள்நாட்டு பங்குச் சந்தையில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 385.04 புள்ளிகள் அல்லது 0.58 சதவீதம் உயர்ந்து 66,265.56 புள்ளிகளில் முடிந்தது. நிஃப்டி 116 புள்ளிகள் அல்லது 0.59 சதவீதம் உயர்ந்து 19,727.05 புள்ளிகளில் முடிவடைந்தது.
10% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனம் ரோகூ!