அபராதம் அதிகம்: ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வெச்சிருக்கிங்களா? இதைப் படிக்க மறக்காதிங்க..

By manimegalai aFirst Published Feb 10, 2022, 1:19 PM IST
Highlights

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது, காசோலை திரும்பிவந்தாலும் அதற்குரிய அபாரதத்ததொகையையும் அதிகரித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது, காசோலை திரும்பிவந்தாலும் அதற்குரிய அபாரதத்ததொகையையும் அதிகரித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐசிஐசிஐ வங்கி கிரெட் கார்டு வைத்திருப்போர்(எமரால்ட் கார்டு தவிர) ரொக்கமாகப் பணம் எடுத்தால் குறைந்தபட்சம் ரூ.500 கட்டணம் அல்லது 2.5 சதவீதம் செலுத்த வேண்டும். கிரெட் கார்டு பில்லை குறிப்பிட்ட தேதிக்குப்பின் செலுத்தினால் அதிகபட்சமாக ரூ.1200 வரை அபராதம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டு முலம் பில் தொகை ரூ.100க்கும் குறைவாக இருந்தால், எந்த அபராதமும் விதிக்கப்படாது. ஆனால், ரூ.50ஆயிரம் அல்லது, அதற்கு அதிகமாக நிலுவைக் கட்டணம் இருந்தால், ரூ.1200 வரை அபராதம் விதிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் ஐசிஐசிஐ வங்கி காசோலை வழங்குவோர் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால், அதற்கு ரூ.500 அபராதம் அல்லது காசோலை தொகையில் 2 % அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதிமுறை இன்று முதல்(10ம்தேதி) நடைமுறைக்கு வந்துள்ளது
கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரை ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ்வங்கி ஆகியவை ஏற்கெனவே முறையே, ரூ.1300, ரூ.1200, ரூ.1000 அபராதமாக வசூலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்து.

ஹெச்டிஎப்சி 

1.ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டில் ரூ.100க்கும் குறைவாக நிலுவை இருந்தால் அபராதம் ஏதும் இல்லை
2. குறிப்பிட்ட தேதிக்குள் கிரெடிட் கார்டு கட்டணத்தைச் செலுத்தாவிட்டால், தாமதக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்
3.ரூ.501முல் ரூ.5000 வரை நிலுவை இருந்தால் ரூ500 அபராதமாகவும், ரூ.5001 முதல் ரூ.10000 வரை நிலுவை இருந்தால் ரூ.600 கட்டணமும், ரூ.10001 முதல் ரூ.25000 வரை நிலுவை இருந்தால், ரூ.800 அபராதமும், ரூ.25001 முதல் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால் ரூ.1200 அபராதமும் விதிக்கப்படும்


 

click me!