Royal Enfield Scram 411 : இதுதான் வித்தியாசமா? லீக் ஆன ஸ்கிராம் 411 பிரவுச்சர்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 10, 2022, 12:38 PM IST
Royal Enfield Scram 411 : இதுதான் வித்தியாசமா? லீக் ஆன ஸ்கிராம் 411 பிரவுச்சர்

சுருக்கம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்கிராம் 411 மாடல் பிரவுச்சர் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.  

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்கிராம் 411 மாடலின் விவரங்கள் டீலர் மூலம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்கிராம் 411 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் தான் ஸ்கிராம் 411 விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 

ஹிமாலயன் மாடலை தழுவி உருவாகி இருக்கும் ஸ்கிராம் 411 மாடலில் ஹெட்லைட்டை சுற்றி அலுமினியம் கவுல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹிமாலயன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் லக்கேஜ் ரேக் ஸ்கிராம் 411 மாடலில் வழங்கப்படவில்லை. இவை இரண்டும் ஸ்கிராம் 411 மற்றும் ஹிமாலயன் இடையே வித்தியாசப்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன. 

இத்துடன் ஹிமாலயன் மாடலில் உள்ள ட்ரிப்பர் நேவிகேஷ் பாட் ஸ்கிராம் 411 மாடலில் வழங்கப்படுகிறது. எனினும், முன்புறம் உள்ள பெரிய விண்ட்ஸ்கிரீன் ஸ்கிராம் 411 மாடலில் காணப்படவில்லை. இதே விவரங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த ஸ்பை படங்களிலும் இடம்பெற்று இருந்தது. இத்துடன் ஸ்கிராம் மாடலில் சற்றே சிறிய முன்புற சக்கரம் வழங்கப்படுகிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200mm ஆக இருக்கிறது.

ஹிமாலன் மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220mm ஆகும். இந்த மாடல் இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், புதிய ஸ்கிராம் 411 மாடல் ஏற்கனவே விற்பனையகம்  வரத்துவங்கி விட்டன. தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்கிராம் 411 விலை ஹிமாலயன் மாடலை விட ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம். 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!