விஸ்வகர்மா திட்டத்தில் ஒரு லட்சம் கடன்! அதிகபட்ச வட்டியே 5% தான்! மத்திய அரசு அறிவிப்பு

By SG Balan  |  First Published Aug 16, 2023, 3:40 PM IST

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 5 சதவீதம் வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெறலாம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.


மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 5 சதவீதம் வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெறலாம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். விஸ்வகர்மா திட்டம் குறித்து பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பேசியிருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாரம்பரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்திற்கு பிரதமர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

விஷ்வகர்மா திட்டத்தின் கீழ் கடன் வழங்க ரூ.13,000 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதெல்லாம் வெளிநாட்டு கம்பெனின்னு நெனைச்சீங்களா! ஆச்சரியப்பட வைக்கும் 10 இந்திய நிறுவனங்கள்!

முடி திருத்துபவர்கள், பொற்கொல்லர்கள், துவைப்பவர்கள் போன்ற தொழில்களைச் செய்துவருபவர்களுக்கு, ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை கடன் உதவி கொடுக்க விஸ்வகர்மா திட்டத்தை மத்திய அரசு தொடங்கும் என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

செப்டம்பர் மாதம் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று இத்திட்டம் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார். விஸ்வகர்மா ஜெயந்தி செப்டம்பர் 17ஆம் தேதி வருகிறது.

பிரதம மந்திரியின் விஸ்வகர்மா திட்டம் மூலம் தொழில்திறன் மிக்க நபர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலகளாவிய அளவில் விரிபடுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இத்திட்டம் பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் சமூகத்தின் பிற நலிந்த பிரிவினருக்கு பொருளாதார வலுவூட்டலுக்கு வழிவகுக்கும் எனவும் அரசு நம்புகிறது.

9 ஆண்டில் மத்திய அரசு ரூ.2.73 லட்சம் கோடி சேமித்திருக்கிறது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

click me!