2014 முதல் படிப்படியாக நேரடி வங்கி டெபாசிட் மூலம் ரூ.2.73 லட்சம் கோடி ரூபாயைச் சேமித்துள்ளதாகவும் இந்தப் பணம் பல திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.
மத்திய அரசின் நலத்திட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்கும் தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்ததன் (மூலம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ.2.73 லட்சம் கோடி பணத்தை மிச்சப்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
திங்கட்கிழமை திஷா பாரத் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளதால், ஓய்வூதியம், சம்பளம், வட்டி, மானியம் மற்றும் உள்ளிட்டவை தகுதியான பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றன" என்று கூறினார்.
தியாகிகள் ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுதந்திர தின அறிவிப்பு
"கடந்த ஒன்பது ஆண்டுகளில் நிர்வாகத்தின் செயல்திறன் காரணமாக, கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு அதிக பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளது. 2014 முதல் படிப்படியாக நேரடி வங்கி டெபாசிட் மூலம் ரூ.2.73 லட்சம் கோடி ரூபாயைச் சேமித்துள்ளோம்... இந்தப் பணம் இப்போது பல திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது." எனக் கூறினார்.
மத்திய அரசாங்கத்தின் கொள்கை காரணமாக 2014 இல் ரூ.308 ஆக இருந்த மொபைல் டேட்டா செலவு ரூ.9.94 ஆகக் குறைந்துள்ளது என்றார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 11.72 கோடி கழிப்பறைகளையும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 3 கோடி குடியிருப்புகளைக் கட்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 39.76 லட்சம் தெருவோர வியாபாரிகள், ஆத்மா நிர்பர் நிதி திட்டத்தின் கீழ் பிணை இல்லா கடன் பெற்றுள்ளனர். ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் எஸ்சி/எஸ்டி பயனாளிகளுக்கு ரூ.7,351 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன.
இதெல்லாம் வெளிநாட்டு கம்பெனின்னு நெனைச்சீங்களா! ஆச்சரியப்பட வைக்கும் 10 இந்திய நிறுவனங்கள்!