Radha Vembu : கடந்த ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி இந்தியா அளவில் உள்ள 100 பணக்காரர்களில், ராதா வேம்பு 40வது இடத்தில் உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ராதா வேம்பு?
பிரபல ZOHO Corp நிறுவனத்தின் இணை நிறுவனர் தான் ராதா வேம்பு. அவரது மூத்த சகோதரர் ஸ்ரீதர் வேம்புவால் கடந்த 1996ம் ஆண்டு நிறுவப்பட்டது தான் இந்த ZOHO Corp என்ற நிறுவனம். 1996ம் ஆண்டு சிறிய அளவில் அவர்கள் துவங்கியபோது "அட்வென்ட்நெட்" என்ற பெயரில் தான் தங்கள் முதல் வணிகத்தைத் அவர்கள் தொடங்கினார்கள்.
ZOHO பற்றி கேள்விப்பட்டதுண்டா?
Zoho கார்ப்பரேஷன் என்பது கணினி மென்பொருள் மற்றும் இணைய அடிப்படையிலான வணிகக் கருவிகளை உருவாக்கும் ஒரு இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். Whatsapp செயலுக்கு மாற்றாக "அரட்டை" என்ற செயலியை இந்த நிறுவனம் இப்பொது டெஸ்டிங் ஸ்டேஜில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Gold Rate in Tamilnadu: மீண்டும் தாறுமாறாக எகிறும் தங்கம் விலை.. கவலையில் நகை்கப்பிரியர்கள்!
ராதா வேம்பு
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இப்போது சென்னையில் தான் வாழ்ந்து வருகிறார் ராதா வேம்பு. கடந்த 1978ம் ஆண்டு சென்னையில் பிறந்த அவருக்கு வயது 54, சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ராதா, மெட்ராஸ் IITயில் தான் தனது கல்லூரி படிப்பையும் முடித்தார். பிறகு தனது சகோதரரோடு இணைந்து சொந்த நிறுவனத்தை துவங்க அனைத்துவித பணிகளையும் மேற்கொண்டார்.
Zoho நிறுவன பங்குகளை பொறுத்தவரை ராதா வேம்பு தான் அதிக அளவிலான பங்குகளை வைத்துள்ளார். சரியாக சொல்லப்போனால் Zoho நிறுவனத்தின் 47 சதவிகித பங்குகள் அவரிடம் தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மின்னஞ்சல் சேவையான Zoho Mailன் தயாரிப்பு மேலாளராகவும், கார்பஸ் அறக்கட்டளையின் இயக்குநராகவும் உள்ளார் ராதா வேம்பு.
ராதா வேம்பு சொத்து மதிப்பு
கடந்த பல ஆண்டுகளாக தனது சகோதரோடு இணைந்து பெரும் சாம்ராஜ்யத்தை உருவாகியுள்ள ராதா வேம்புவின் சொத்து மதிப்பு ரூ.36,000 கோடி. இந்திய அளவில் சுமார் 22,500 கோடி சொத்து மதிப்புள்ள ஃபால்குனி நாயர் 86வது இடத்தில் உள்ள நிலையில், ராதா வேம்பு இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் 40வது இடத்திலும் உள்ளார்.
49 பிரீமியம் அறைகள்.. ரூ.592 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர ஹோட்டல் பற்றி தெரியுமா?