
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விரைவில் புதிய சாதனையை படைக்க இருக்கிறது. நாட்டிலேயே ரூ.19 லட்சம் கோடி மதிப்பு கொண்டநிறுவனமாக மாற இருக்கிறது.
10% அதிகரிப்பு
கடந்த 3 நாட்களில் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் மதிப்பு 10சதவீதம் அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் மதிப்பு ரூ.18.85 லட்சம் கோடியை எட்டியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.2,787.10 ஆக அதிகரித்தது. இதற்கு முன் ரிலையன்ஸ் பங்கு மதிப்பு அதிகபட்சமாக 2021ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ரூ.2,750 ஆகத்தான் இருந்தது. அதைவிட இன்று மதிப்பு அதிகரித்தது.
ரூ.19 லட்சம் கோடி
மும்பை பங்குச்சந்தை தகவலின்படி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட் மிட்-கேப் மதிப்பு ரூ.18.84 லட்சம் கோடியாகும். ரூ.19 லட்சம் கோடியை எட்டுவதற்கு இன்னும் ஒரு சதவீதம் மட்டுமே தேவைப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.54 லட்சம் கோடி அதாவது 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெட்ரோகெமிக்கல்ஸ் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தலில் மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இருந்து வருகிறது. இது தவிர சில்லரை விற்பனை, டிஜிட்டல் சேவை, ஊடகம் என பல்வேறு தொழில்களில் இருந்து வருகிறது.
அம்பானி வார்த்தை
மோர்கன் ஸ்டான்லி நறுவன சந்தை ஆய்வாளர்கள் கூறுகையில் “ ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் விலையின் உச்ச கட்ட இலக்கு ரூ.3,253 ஆக வைத்துள்ளார்கள். இந்த உயர்வு நிச்சயம்நிறுவனத்துக்கு ஊக்கத்தை அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி 2035ம் ஆண்டுக்குள் உலகிலேயே எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மிகப்பெரிய நிறுவனமாாக மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.