nestle india share: நெஸ்ட்லே இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 1.25% குறைவு: விற்பனை 10%அதிகரிப்பு

Published : Apr 21, 2022, 02:08 PM IST
nestle india share: நெஸ்ட்லே இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 1.25% குறைவு: விற்பனை 10%அதிகரிப்பு

சுருக்கம்

nestle india share: : நெஸ்ட்லே இந்தியாவின் 2022ம் ஆண்டுக்கான மார்ச் மாதம் முடிந்த முதல் காலாண்டில் நிகர லாபம் 1.25 சதவீதம் குறைந்து ரூ.594.71 கோடியாக இருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெஸ்ட்லே இந்தியாவின் 2022ம் ஆண்டுக்கான மார்ச் மாதம் முடிந்த முதல் காலாண்டில் நிகர லாபம் 1.25 சதவீதம் குறைந்து ரூ.594.71 கோடியாக இருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலானஆண்டை நிதியாண்டாகக் கணக்கில் வைக்கிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டு முடிவை நெஸ்ட்லே இந்தியா இன்று வெளியிட்டது.

இதில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் நெஸ்ட்லே இந்தியாவின் நிகர லாபம் 1.25%குறைந்து, ரூ.594.71 கோடியாக இருக்கிறது. இது கடந்த 2021ம் ஆண்டு, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஆண்டில் ரூ.602.25 கோடி லாபமீட்டியது.

2022ம் ஆண்டு முதல் காலாண்டில் நெஸ்ட்லே இந்தியாவின் நிகர விற்பனை 9.74 சதவீதம் அதிகரித்து, ரூ.3,950.90 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,600.20 கோடியாகத்தான் இருந்தது. 

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் செலவு 12.98 சதவீதம் அதிகரித்து, ரூ.3,195.90 கோடியாக உயர்ந்துள்ளது.  இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் செலவு ரூ.2,828.61 கோடியாகத்தான் இருந்தது. 

நெஸ்ட்லே இந்தியாவின் உள்நாட்டு விற்பனை 10.23 சதவீதம் உயர்ந்து, ரூ.3,794.26 கோடியாக இருக்கிறது, இது கடந்த 2021ம் ஆண்டு முதல் காலாண்டில் ரூ.3,442.20 கோடியாகஇருந்தது.

நெஸ்ட்லே இந்தியாவின் ஏற்றுமதி சற்று குறைந்துள்ளது. அதாவது 0.96% ஏற்றுமதி குறைந்து, ரூ.156.64 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு முதல் காலாண்டில் ரூ.158.17 கோடியாக இருந்தது.

பங்குச்சந்தையில் இந்த தகவலை நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து நெஸ்ட்லே இந்தியாவின் பங்கு மதிப்பு ரூ.18,089 ஆக இருந்து வருகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!
முதலீட்டாளர்கள் கவனம்! ரூ.66 கோடி ஆர்டர்! மல்டிபேக்கர் பங்கு மீண்டும் அதிரடி!