
வருமான வரிச்சோதனையிலிருந்து யாரெல்லாம் தப்பிக்கலாம் .....!!!
கருப்பு பண ஒழிப்பு காரணமாக, பழைய ருபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரொக்க பரிவர்த்தனைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது மத்திய அரசு .
அதன்படி, ரூபாய் 3 லட்சத்திற்கு மேல், ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டால், 3 லட்சம் அபராதம் என வருமானவரித்துரைத்யினரின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் தொடர்பாக இதுவரை 18 லட்சம் வங்கிக்கணக்குகளில் திசை திருப்பியுள்ளது வருமானவரித்துறை ....
யாருக்கெல்லாம் விலக்கு ?
ரூ.2.5 லட்சத்துக்கு மேற்பட்ட டெபாசிட்டாக இருந்தாலும், ஒரு நபர் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்திருந்து, அவரது ஆண்டு வரிக்கு உட்பட்ட வருவாய் ரூ.10 லட்சமாக இருந்தால் அவரிடம் கேள்வி கேட்கப்படாது.
நிறுவன கணக்குகளில் பணம் கையிருப்பு ரூ.10 லட்சம் என இருந்து அதில் ரூ.5 லட்சம் பழைய நோட்டாக டெபாசிட் செய்திருந்தாலும் விசாரணை வராது.
குறிப்பு :
அதேநேரத்தில் டெபாசிட் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்து, வருமான வரி கணக்கு கடந்த 3 ஆண்டாக தாக்கல் செய்யாதிருந்தால் அவர்களிடம் வருமான வரித்துறை விசாரிக்கும்.
இந்நிலையில், இதுவரை சுமார் 18 லட்சம் , வங்கிகணக்கு உரிமையாளர்களுக்கு, கருப்பு பண டெபாசிட் செய்துள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.