
கருப்பு பண ஒழிப்பு :
கருப்பு பண ஒழிப்பு காரணமாக, பழைய ருபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரொக்க பரிவர்த்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மத்திய அரசு .
அதன்படி, ரூபாய் 3 லட்சத்திற்கு மேல், ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டால், 3 லட்சம் அபராதம் என வருமானவரித்துரைத்யினரின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய மண்டிகளில் நடைப்பெறும் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள்...!
விவசாய வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிய, விவசாய வருவாய் கண்காணிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாய மண்டிகளில், நடைப்பெறும் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்றும், மேலும் ₹3 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை கூடாது என்ற அறிவிப்பால், விவசாய மண்டிகளில் பண புழக்கம் வெகுவாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ய முடியாது
விவசாயத்தை காரணம் காட்டி வரி ஏய்ப்பு செய்வது, இந்த கட்டுப்பாடுகள் மூலமாக கட்டுப்படுத்த முடியும் எனவும், தெரிவிக்கபட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பாதிப்பா ?
அதாவது விவசாயத்தை காரணம் காட்டி வரி ஏய்ப்பு செய்பவர்களை இந்த சட்டம் தடுக்கும் எனவும், உண்மையான விவசாயிகளை இந்த சட்டம் ஒருபோதும் பாதிக்காது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி, வருமான வரி கணக்கிடும் நிபுணர்கள் கூறுகையில், ‘‘விவசாயிகளுக்கு வரி விலக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
எப்படி வரிவிலக்கு ?
ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விவசாய வருமானத்தை ஒருவர் கணக்கு காண்பிக்கும்போது, இந்த பணம் விவசாயத்தில் எந்த வகையில் பெறப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சம்பந்தப்பட்ட விவசாயி அளித்தால், எந்த விதமான பிரச்னையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாய வருமானம் என போலியாக கணக்கு காண்பிப்பவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.