
இரண்டாவது வீடு வாங்க வருகிறது பெரிய முட்டுக்கட்டை .....!!! வருமானவரித்துறை அதிரடி தாக்கு ....!!!
வீடு இல்லாதவர்கள், தாங்கள் வாங்கும் முதல் வீட்டிற்கு வரி சலுகை கொடுக்க மதிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதன் முதலா வீடு வாங்குவோர் ஒரு குறிப்பிட்ட லட்சத்திற்கு வரிசலுகை பெற முடியும். ஆனால் இரண்டாவது வீடு வாங்கும் போது வரிசலுகை வெகுவாக குறைக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
அதன்படி , இரண்டாவது வீடு வாங்குவோர் :
இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் வரை மட்டுமே வரிச்சலுகை வழங்க முடியும். அதற்கு மேல் வரிச்சலுகை வழங்குவது தேவையற்றது என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் ஒரு வீடு கூட சொந்தமாக இல்லாதவர்கள் இருக்கும் போது, இரண்டாவதாக வீடு வாங்குவதை ஊக்குவிக்க முடியாது என்றும், கூடுதல் பணம் வைத்திருப்பவர்கள் தான் இரண்டாவது வீட்டை முதலீடுக்காக வாங்குகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
நிதி மசோதா என்ன சொல்கிறது ?
2017 ஆண்டு, நிதி மசோதா படி, ஒரு ஆண்டுக்கு, வட்டி மூலமான வரிச் சலுகை ரூ. 2 லட்சம் மட்டுமே வழங்கமுடியும் என திருத்தி எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது முதல் மற்றும் இரண்டாம் வீட்டுக்கும் சேர்த்தே ரூ.2 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.