பண்டிகை காலத்தில் மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதி அளிக்கும் வகையில் சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து இன்று அறிவித்துள்ளன.
பண்டிகை காலத்தில் மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதி அளிக்கும் வகையில் சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து இன்று அறிவித்துள்ளன.
இந்த விலை குறைப்பு வர்த்தகரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டருக்கு மட்டும்தான், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 கிலோ கேஸ் சிலிண்டருக்கு விலை குறைக்கப்படவில்லை.
அடல் பென்ஷன் திட்டத்தில் வருமானவரி செலுத்துவோருக்கு இடமில்லை: அக்டோபர் முதல் அமலானது
இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தகரீதியான கேஸ் சிலிண்டர் விலை அக்டோபர் 1ம் தேதி முதல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.36 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நேற்றுநள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆர்பிஐ-யின் எளிய 6 வழிகள்! உங்கள் டெபிட், கிரெடிட் கார்டை எவ்வாறு டோக்கனைஷ் செய்வது?
வர்த்தகரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.25 குறைந்து ரூ.1,859ஆகக் குறைந்துள்ளது. மும்பையில் ரூ.32.50 குறைந்து ரூ.1,811.50ஆகவும், கொல்கத்தாவில் ரூ.36 குறைக்கப்பட்டு, ரூ.1959ஆகவும் விற்கப்படுகிறது. சென்னையில் ரூ.35.50 குறைக்கப்பட்டு, ரூ.2,008.50ஆக விற்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.91.50 பைசா குறைக்கப்பட்டநிலையில் 2வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் விலை குறைக்கப்பட்டபின் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.2,045 ஆக குறைந்தது, தற்போது ரூ.2008ஆகச் சரிந்துள்ளது.
கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2354 ஆக இருந்தது, அதன்பின் ஜூன் மாதம் ரூ.2,219 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்கள் என்ன?
ஆனால் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில்எந்த மாற்றமும் செய்யவில்லை. கடந்த ஜூலை மாதம் 6ம் தேதிசிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது அதன்பின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது. கடைசியாக மே 19ம்தேதி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. அதன்பின் கடந்த 5 மாதங்களாக விலை குறைக்கப்படவில்லை.
டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,053 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1079, மும்பையில் ரூ.1052, சென்னையில் ரூ.1068.50ஆகவும் விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
பண்டிகைக்காலம் வருவதால், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்திருக்கலாம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ள நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டாவது சிலிண்டர் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்திருக்கலாம் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.